காதல் தரும் வெகுமானம்

கனவுலக சஞ்சாரம் காதல்தரும்
வெகுமானம்

உண்மைகள் உணரா சிலகாலம்
இழுத்துப்போகும் வெகுதூரம்

நிதானிக்கமுடியா அதன் வேகம்
காட்டாறாய் அடித்துப்போகும்

காத்திருந்த காலம் தடைபோடும்
அதற்குள் எல்லாம் கைமீறும்

அதன்பின் வரும் ஒரு நிதானம்
அதுவும் காதல் தரும் வெகுமானம்

எழுதியவர் : நா.சேகர் (18-Feb-20, 5:35 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 75

மேலே