பால் நேச ராஜன் 18 பிப் 2020

கண்களால் காண இயலா
சுகந்த மணம் பூக்களினுடையது...
தன்னுள் உள்ளடக்கிய வெண்ணெய்
வெளிக்காட்டா பண்பு
பசும் பாலினுடையது...
செய்த சாதனைகள்
வெளிச் சொல்லா குணம்
நண்பன் பால் நேசனுடையது...

ஜிஸிஇ'86 எனும் ஸ்ட்ரக்சரின்
ஒரு அங்கம் இவன் எனினும்
மொமன்ட் அதிகமாகும் போதெல்லாம்
லிவர் ஆர்ம் ஆக இவன்
செயல் படுவதால் எதையும்
தாங்கும் குழுவாக இது உள்ளது...
நமக்கெல்லாம் அது நல்லது...

காதலர் தினத்தில் திருமணம்
சீரிய பொறியியல் கற்ற
பால் நேச ராஜனுக்கு...
பற்களின் மருத்துவத்தில்
தேர்ந்த மங்கையோடு...
பால் நேச ராஜனின் சிரிப்பழகு
பால் போன்று அழகானதற்கு
காரணம் இப்போதல்லவா தெரிகிறது..

அன்பால் நேசத்தால்
ராஜன் ஆக
வாழும் சென்னை வாழ்
நாஞ்சில் நாடன்... நண்பன்...
பால் நேச ராஜன்...
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் பல பெற்று...

பூக்கள்... பூந்தோட்டங்களின்
ரசிகன் பால் நேசன் என
இவன் காலை வாழ்த்துக்கள்
சொல்லும்... கட்டுமான அறிவில்
கரை கண்டவன் என இவன்
கட்டிய கட்டிடங்கள் சொல்லும்...
வசந்தங்கள் உன்னோடு
வளங்கள் எல்லாம் உன்னோடு
வாழ்க பல்லாண்டு என
என் வாழ்த்துக்கள் சொல்லும்...
நண்பன் பால் நேச ராஜனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
😀🌹👏💐👍🧁🎂🚲

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (19-Feb-20, 1:19 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 77

மேலே