உன் நினைவுகள் நிரந்தரமானவை 555

என்னவளே...


நீயும் நானும் பழகிய
நாட்களை மறந்து...

நீ எப்படி வாழ்கிறாய்
சொல்லிகொடடி...

கனல் நீராய் போனதோ
உயிர்கொண்ட நம் காதல்...

நீ கொடுத்த பரிசுகள்
எல்லாம் திரும்ப வாங்கிக்கொண்டாய்...

நீ வாங்கி கொள்ளாமல் சென்றது
இரண்டு மட்டும் தானடி...

நீ கொடுத்த முத்தமும்
உன் நினைவுகளும்...

உன் முத்தங்களை
நீ வாங்கி கொண்டாலும்...

உன் நினைவுகளை என்னிடமிருந்து
யாராலும் வாங்க முடியாதடி...

நீ கொடுத்த நினைவுகள்
எனக்கு மட்டும் சொந்தமானவை...

உன் நினைவில் நான் இல்லை
என்பது உண்மைதான்...

என் நினைவெல்லாம் நீதான்
என்பதும் உண்மை தானடி...

இன்றுவரை ஆண்டுகள்
சில கண்டந்தும்...

உன் நினைவுகள் மட்டும்
என் வாழ்வில் நிரந்தரமானவை என்றும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (19-Feb-20, 8:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2152

மேலே