பியூசு பீயுசு
ஏன்டா கண்ணுச்சாமி அமெரிக்காவில இருக்கிற உம் பேரன் மனைவி சீத்தலுக்கு (ஷீத்தல்) ரட்டைக் கொழந்தை பொறந்ததாமே?
@@@@@
ஆமாம்டா பொன்னுசாமி. அந்தச் சீத்தலைக்கு ரட்டைப் பசங்க பொறந்திருக்குது. எம் பேரன் போன வாரம் போனு பண்ணிச் சொன்னான்டா.
@@@@@@@
சரி. கொழந்தைங்க ரண்டு பேருக்கும் பேரு வச்சுட்டாங்களாமா? வச்சுட்டாங்க. நான் எம் பேரனுக்கு 'இளங்கோ' _ன்னு அழகான தமிழப் பேரை வச்சேன்..அவன் இங்க படிக்கிற காலத்திலேயே அவம் பேர ஓமகாந்த் (ஓம்காந்த்) -ன்னு மாத்திட்டான். அந்தப் பேரக் கேட்டா நம்ம ஊர்ல இருந்த ஊமக்கந்தன் பேருதான் ஞாபகத்துக்கு வருது.
@@@@@
சரி. சரி. உங் கொள்ளுப் பேரங்க பேரச் சொல்லுடா கண்ணுச்சாமி.
@@@@@@
ஒரு கொழ்தை பேரு 'பியூசு' (Piyush). இன்னொரு கொழந்தை பேரு 'பீயூசு' (Peeyush).
@@@@@@.
என்னடா பேருங்க இது. பீயூசுன்னு சொல்லறபோதே மூக்குமேல கைய வச்சு இறுக்கி மூடத் தோனுது.
@@@@@@
இந்திப் பேர வச்சுக்கிறதுதான் நாகரிகம்னு நெனச்சு அத நூத்துக்கு தொண்ணூத்தி அஞ்சு சதவீதம் பேரு நெறவேத்திட்டு இருக்குறாங்க. நம்ம தமிழ் சனங்க இந்திக்காரங்களப் பாத்தாவது திருந்தணும். நம்ம தமிழ் நாட்டில லட்சக்கணக்கான இந்திகாகாரங்க பல தலைமுறையா வாழ்ந்திட்டு இருக்குறாங்க. அவுங்கள்ல ஒருத்தருகூட அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேர வைக்கிறதில்ல. நம்ம சனங்களுக்கு தாய்நாட்டுப் பற்று நெறைய இருக்குது. ஆனா பெரும்பாலனவங்களுக்கு தாய்மொழிப் பற்று அணுவளவும் கெடையாதுடா.
@@@@@@@
இதுக்காக நாம வெக்கப்படணும். தன்மானம் எங்க விக்குதுன்னு தமிழர்கள் கேக்கற நெலமை வந்திருச்சு. வெக்கக்கேடு. வெக்கக்கேடு.
"■■■■■■■◆◆■■■■◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
மேலே உள்ள பெயர்களின் பொருளை _ இண்டியாசைல்ட்நேம்ஸ்.காம்_ல் பார்க்கவும்.