பொன்னாவரை இலை காய் பூ

'இந்தப்படி முன் ஒருவர் கேட்க, அதற்கு உடுத்தவும் எனத் தொடங்குமோர் வெண்பாவைக் கவிராயரும் சொன்னார். மீண்டும் அதே தொடரைக் கொடுத்து வேறு ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுக” என்றார் சாமிநாதர் என்னும் ஒருவர். அப்படியே கவிஞர் பாடியது இது.

நேரிசை வெண்பா

தோய்ந்தான்மேய்த் தான்குடையாய்த் தூக்கினான் மேன்மேலாச்
சாய்ந்தா னெறிந்தான்பின் சாப்பிட்டான் - ஆய்ந்துசொலும்
மன்னா வரத்தி(ல்)வரு மால்சாமி நாதாகேள்
பொன்னா வரையிலைகாய் பூ. 35

– கவி காளமேகம்

பொருளுரை:

எதனையும் ஆராய்ந்த பின்னரே அதனைப் பற்றிப் பேசும் இயல்புடைய மன்னவனே! வருகிற போக்கிலே வந்து இந்தச் சபையில் அமர்ந்துவிட்ட சாமிநாதனே! கேட்பீராக:

திருமாலானவன் திருமகளோடு கலந்து இன்புற்றான்; பசுமந்தைகளை மேய்த்தான்; தான் கோவர்த்தனம் என்னும் மலையினையே குடையாகத் தூக்கிப் பிடித்தான்; ஆலிலையின் மேலாகத் தன் உடல் கொண்டு படுத்தான்; விளங்காயை எறிந்தான்; பின்னர் நிலவுலகையும் விழுங்கினான்' என்று அறிவீராக என்றுரைத்தார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Feb-20, 8:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

மேலே