அதியமான்-புலவர் அவ்வையார் நட்பு

தகடூரை ஆண்டுவந்த சிற்றரசன்
அதியமான் நெடுமான் அஞ்சி
மாவீரன் பெருந்தகையன் அவன்
போரில் இவனைக் கண்டால்
எதிரிகள் புளியைக்கண்ட மான்போல்
ஓடி ஒளிந்திடுவார் என்று புறநானூற்று
புலவர்கள் கூறிய பெருமை இவனுடைத்து
அவன் அவையில் சங்க புலவர் அவ்வைபிராட்டி
அவ்வப்போது வந்து போவார்...
அவ்வையும் அதியமானும் பெரும் நண்பர்கள்
ஒருமுறைப் போரிலிருந்து வீடு திரும்பும்
அதியமான் வழியில் ஓர் தனித்திருந்த
நெல்லிமரம் காண்கின்றான் அதில்
அவன் கருத்தைக் கவர்ந்தது தனித்திருந்த
கருநெல்லிக் கனி ...... இதை உண்டால்
பிணி நீங்கி நெடுநாள் உயிர் வாழ்ந்திடுவார்
என்று மருத்துவர் கூறுவார்... இது மன்னன்
நெஞ்சில் பளிச்சென உதித்து தங்கியது

நாடு திரும்பிய மன்னன் அதியமான்
அவ்வைப் பிராட்டியை சபைக்கு அழைத்தான்

தான் கண்டெடுத்த அருங்கனியை அம்மைக்கு
அளித்து 'அம்மையே புலவர் செம்மலே இக்கனியை
நீர் உண்டு நெடுங்காலம் இனிதே வாழ்ந்து நம்
அருந்தமிழுக்கு தொண்டாற்றுகவே' என்று கூறி
அளித்தான்..... அதை உன்ன மறுத்த அவ்வையோ
என் இனிய நண்பரே மாவீரர் நீர் இதையுண்டு
பல்லாண்டு வாழ்ந்திடல் வேண்டும் என்றாள்
அதியமான் மறுத்தான்.... அம்மையே என் போன்ற
வீரர் வருவார் போவார்... ஆயின் தாய்த்தமிழுக்கு
உம்போல் மற்றோர் புலவர் மீண்டும் வருவார்
எப்போது யாரறிவார்... நீர் இதை உண்டு நீடு
வாழ்கவே... தமிழுக்கு தொண்டு செய்து இது
நான் இடும் அன்புக்கு கட்டளை என்றான்
கரம் தாழ்த்தி.....

என் மனதைத் தொட்ட சங்க கால
நட்பிற்கு ஓர் அறிய எடுத்துக் காட்டு இது

நம் சிறுவர்கள் இதைப் படித்து நட்பின்
இலக்கணம் புரிந்துகொள்வாராக

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Feb-20, 1:10 pm)
பார்வை : 308

மேலே