அன்பு மகளின் பாசம்

அப்பா... அப்பா...

என்னடா சின்னவளே...?

அக்கா.. பாட்டிகிட்ட காசு வாங்கினாப்பா...

அப்டியா...
ஏன் வாங்கினா... ?
கூப்பிடு அவள...

அக்கா... ...
உன்னை அப்பா கூப்பிட்டாரு.. வா....

அப்பா..
என்னை கூப்பிட்டிங்கலாப்பா...

ஆமா பெரியவள...
பாட்டிகிட்ட நீ ஏதாச்சும் காசு வாங்கினியா...?

இல்லப்பா... நான் வாங்கல...

டேய் பொய் சொல்லாதடா...
சின்னவ என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா....
சொல்லு வாங்கினியா...?

இ்ல்லப்பா...நான் வாங்கல...

அப்பா.. அக்கா பொய் சொல்றாப்பா...

டேய்....
உண்மைய சொல்ற பெரியவளே..
பொய் சொன்னா நான் அடிச்சிடுவ...

நிஜமா இல்லப்பா...

அப்பா.. நிஜமா நான் பாா்த்த...
அக்கா வாங்கினா...

அப்டியா..சின்னவளே...
நீ போயி அந்த ஸ்கேல் எடுத்துட்டு வா..
ஒரு அடி கொடுத்தா தா உண்மைய சொல்லுவா...

இதோ எடுத்துட்டு வரம்பா...
............
இந்தாங்காப்பா ஸ்கேல்..

பெரியவளே கைய நீட்டு...
டேய் அடிக்கிறதுக்கு முன்னாடியாவது உண்மைய சொல்லுடா வாங்கினியா...?

இல்லப்பா... நான் வாங்கல..

இப்படி கேட்ட , நீ உண்மைய சொல்ல மாட்ட,
உன்னை அடிச்சாதா உண்மை வெளிய வரும்... கைய நீட்டு...

டேய்.....டேய்....மகனே..

என்னடா பன்ற..
குழந்தை ஏன்டா அடிக்க போற...?

அம்மா..
உங்க கிட்ட அவ காசு வாங்கினாள...இல்லையாம்மா...?

ஆமான்டா... வாங்கினா...
இப்ப அதுக்கு என்ன...?

வாங்கிட்டு...
என்கிட்ட வாங்களான்னு சொல்றாம்மா....
காசுலா... நீங்க குழந்தை கிட்ட கொடுக்காதம்மா...
இந்த சின்ன வயசுல காசு கொடுத்து பழக்கிடாதம்மா...

டேய் நான்...
உன்னை வளர்த்தவடா...
எனக்கு தெரியும்....
அவ எதுக்கு வாங்கினான்னு உனக்கு தெரியுமா...?

பெரியவளே.. போயி எடுத்துட்டுவாம்மா...

சரி பாட்டி.. போயி எடுத்துட்டு வர..

டேய்... கொஞ்ச நேரம் கண்ண மூடு...

ஏம்மா...

டேய்... சொன்னத செய்...

சரிம்மா.. கண்ண மூடிக்கிட்ட...

எவ்வளவு நேரம்மா... இப்படியே இருக்கணும்...

கொஞ்ச நேரம்...

பெரியவ வந்துட்டா...

பெரியவளே.. அத அப்பா கையில கொடு...

அப்பா... கைய நீட்டுங்க...

எதுக்கு மா...?

கைய நீட்டுங்கப்பா...

சரிம்மா...

அப்பா கையில வச்சுட்ட...

இப்ப கண்ண திறங்க...

என்னமா இது...

கவர பிரிச்சு பாருங்கப்பா...

சரிம்மா...

ம்... என்னம்மா வாங்கி வந்துருக்க..
பிரிக்க... பிரிக்க...
கவராவே வந்துட்டு இருக்கு...

பிரிங்கப்பா... தெரியும்...

ம்.... வாவ்...
.........
அழகான நோட்டு...
அழகான பேனா...
-கூடவே ஒரு லட்டர்...
என்ன எழுதிருக்க...

"அன்புள்ள அப்பாவிற்கு அன்புமகளின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்க பிறந்தநாளுக்கு ஏதாச்சும் வாங்கி தரனும்னு நினைச்சம்ப்பா.. ஆனா என்கிட்ட பணம் இல்லப்பா... இப்போதைக்கு பாட்டிகிட்ட கடன் வாங்கினப்பா... ஆனா அந்த பணத்தை பாட்டிகிட்ட கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துடுவப்பா...அதனால என்னை திட்டாதீங்கப்பா... உங்களுக்கு பிடித்தமான நோட்டும்-பேனாவும்... என்னுடைய ஒரு சிறு அன்பளிப்பு... சத்தமா ஒரு தடவை... ஐ லவ் யூ டாடி.. ஆப்பி பர்த் டே...

இப்படிக்கு
உங்கள் அன்புமகள்
யுவஸ்ரீ

பார்த்தியாட என் பேத்திய..
உனக்கு அன்பளிப்பு கொடுக்கத்தா...
எங்கிட்ட பணம் வாங்கினா...
அது சர்பிரைஸா இருக்கட்டுன்னு பொய் சொன்னா...
நீ என்னடான்னா குழந்தைய அடிக்க போற...
ஒன்னுமட்டும் புருஞ்சுக்கோ...
நாம பெரியவங்க...
நம்மகிட்ட காசு இருக்கும்...
அதனால சட்டுன்னு வாங்கிடுவோம்...
ஆனா குழந்தைகளுக்கு வாங்கி தரனும்ன்னு ஆசை இருக்கும்... ஆர்வமும் இருக்கும்... ஆனா காசு இருக்காது... அவளுக்கு அன்பளிப்பு தரதுல ஒரு சந்தோஷம்... அது சிறியதோ-பெரியதோ.. ஆனா அன்பு பெரியது....

சரியா மகனே... இனியாவது புரிஞ்சு நடந்துக்கோ...

சரிம்மா......
தேங்ஸ்டா பெரியவளே..
அன்பளிப்பு நல்லா இருக்கு....

பெரியவளே- சின்னவளே இரண்டு பேரும் கேளுங்க...
அப்பா இன்னிக்கு உங்க இரண்டு பேருக்குமே தனித்தனியா சேமிப்பு உண்டியல் வாங்கி தரப் போறன்..
நீங்க அதுல சிறுக...சிறுக... சேமித்து...
உங்களுக்கு யாருக்கு, எப்ப பரிசு வாங்கி தரனும்னு தோணுதோ..
அப்ப நீங்க இதலயிருந்து பணம் எடுத்து,
சர்பிரைஸா வாங்கி தரலாம்...
ஓகே வா...

ஓகே.... டாடி

( குழந்தைகளிடத்தில் அன்பு அதிகமா இருக்கும். அவங்கலும் மற்றவர்களைப் போல வெளிப்படுத்த நினைப்பாங்க.. ஆனா - அவங்களோட அன்பு சில நேரங்களில் - நெருக்கமானவர்களுக்கே புரியாம போயிடும் )

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (21-Feb-20, 6:46 pm)
Tanglish : anbu makalin paasam
பார்வை : 377

மேலே