அல்கா -- கல்கா

(தொலைபேசி உரையாடல்)
அண்ணே, எல்லாம் நல்லா இருக்கிறீங்களா?
@@@@@
நல்லா இருக்கிறோம்டா தம்பி. சரி உன் மனைவி கண்மணிக்கு பிரசவம் ஆயிருச்சா? ஆண் கொழந்தையா? பெண் கொழந்தையா?
@@@@@
நேத்துத்தான் அண்ணே பிரசவம் ஆச்சு. பெண் கொழந்தை.
@@@@@@
ரொம்ப சந்தோடம்டா தம்பி. எனக்குத்தான் ரண்டும் ஆம்பளப் பசங்க. நான் போன பிறவில என்ன பாவம் செஞ்சேனோ?
@@@@@@
என்ன அண்ணே இதுமாதிரி பேசறீங்க?
@@@@@@
பெண் கொழந்தைங்க பிறப்பு விகிதம் கொறஞ்சிட்டு வருது. பசங்களுக்கு கல்யாண வயசு ஆகிற காலத்தில நூறு பசங்களில் தொண்ணூறு பேருக்குத்தான் பொண்ணு கெடைக்கும். லட்சக்கணக்கான பசங்க பொண்ணுக் கெடைக்காம கட்டை பிரம்மாச்சாரிகளா வாழவேண்டியதுதான். நான் எம் பசங்கள நெனைச்சு கவலைப்படாம எப்பிடா தம்பி இருக்கமுடியும்?
@@@@@@
கவலைப்படாதீங்க அண்ணே. பசங்க ரண்டு பேரையும் நல்லா படிக்க வச்சு ஐஏஎஸ் அதிகாரிங்க ஆக்கிடுங்க. கூலிக்காரங்க பொண்ணாவது உங்களுக்கு மருமகள்களா கெடைப்பாங்க.
@@@@@@
நானும் அந்த நம்பிக்கையிலதான்டா தம்பி வாழ்ந்துட்டு இருக்குறேன். சரி உன்னோட மூத்த பொண்ணுக்கு நம்ம தமிழர் நாகரிகப்படி 'அல்கா' (Alka = beauty, a girl with lovely hair)- ன்னு இந்திப் பேரை வச்சிருக்கிற. இப்பப் பொறந்திருக்கிற பொண்ணுக்கு உங்க ரண்டு பேருக்கும் பிடிச்ச ஒரு இந்திப் பேரை முடிவு பண்ணீட்டாங்களா?
@@@@@@
அண்ணே இப்பெல்லாம் இந்திப் பேரு மாதிரி இருக்கிற அர்த்தமில்லாத எந்த மொழியிலும் இல்லாத பேரை வைக்கிறததுதான் உலகம் பூரா உள்ள நடைமுறை. நாங்க ரண்டாவது கொழந்தைக்கு 'கல்கா'-ன்னு பேரு வைக்க முடிவு பண்ணீட்டோம்.
@@@@@
அல்கா ---- கல்கா. நல்ல பொருத்தமான பேருங்கடா தம்பி. சரி. நீங்க எப்ப அமெரிக்காவிலிருந்து நம்ம ஊருக்கு வர்றீங்க. கொழந்தைக்கு ஒரு வருசம் ஆகறவரைக்கும் வரமுடிமாது அண்ணே.
@@@@@
அதுவும் நல்லதுதான். சரி. வாரத்துக்கு ஒரு நாள் எங்கூடப் பேசுடா தம்பி.
@@@@
சரி அண்ணே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Alka (Indian, Polish origin)

எழுதியவர் : மலர் (21-Feb-20, 9:52 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 52

மேலே