நினைவு காலண்டர்

சின்னஞ்சிறு வயது நினைவலைகளில் ஒன்று ;

அன்பு நண்பர்களுக்கு , (காட்டுமன்னார் கோயில் மக்கள் ரசனைக்கு )
ஒரு திரைப்படம் அது வெளியாகி வெற்றிகரமா ஓடுனா மட்டுமே இங்க படம் பாக்கவே வராங்க . எனக்கு தெரிஞ்சி சின்ன வயசுல அதிகமா சினிமா படங்கள் நூறாவது நாள் போஸ்டர் பாத்துருக்கேன். 1993 ல இருந்து நான் ரசித்து பார்த்த சினிமா படங்கள் ஞாபகம் இருக்கு . அப்ப காட்டுமன்னார்குடியில வெங்கடேஸ்வரா மற்றும் விநாயகா ன்னு 2 தியேட்டர் இருந்துச்சு . அது தா எங்களுக்கு அன்றைய சத்யம், மாயாஜால், அபிராமி தியேட்டர். செகன்ட் ரிலீஸ் படங்கள் தா இங்க ஓடும். அதாவது ஒரு புது படம் ரிலீஸ் ஆகி 50 நாட்களுக்கு அப்பறம் தா இங்க வரும் . தீபாவளி பொங்கல் மாதிரி நேரத்துல மட்டும் 20 லருந்து 30 நாட்கள் ல ஓடிக்கிட்ருக்க படம் வரும். அப்ப படம் பார்க்க போகுறப்ப ஒரு 2 இல்ல 3 குடும்பங்களாவது சேர்ந்து போவோம். அதுக்காக ஸ்னாக்ஸ் லா வீட்டுலயே செஞ்சு எடுத்துக்கிட்டு தா அங்க படம் பாக்க எல்லாருமே போவோம் . இடைவேளை டைம்ல கருப்பு கலர் , முறுக்கு பாக்கெட் , பாப்கார்ன் இதெல்லாம் வீட்ல வாங்கி கொடுப்பாங்க

. அப்போ எனக்கு தெரிஞ்சி சினிமா டிக்கெட் 5 ரூபாய் . விநாயகர் தியேட்டர் ல ஒரு தடவ திடீர்னு டிக்கெட் விளைய கம்மி பண்ணியிருந்தாங்க .அப்ப நான் குடும்பத்தோட பார்த்த படம் "ஆத்தா உன் கோவிலிலே " நடிகர் செல்வா நடிச்ச படம் ஞாபகம் இருக்கு . ஒரு டிக்கெட் 1 ரூபாய் 50 பைசா . கொஞ்ச நாள் இந்த விலைக்கே டிக்கெட் இருந்து அப்பறம் 5 ருபாய் திரும்ப கொண்டு வந்தாங்க. (இந்த விஷயம் தெரிஞ்சவங்க கமெண்ட் ல சொல்லுங்க )

நான் தனியா படம் பாத்தது 8 வது படிக்கும் போது தா . நானும் என் நண்பனும் போயிருந்தோம் . அது ஒரு இங்கிலிஷ் படம். அந்த நாட்கள்ல இங்கிலிஷ் படம் பாத்தா ஏதோ தப்பான படம் பாக்க போகுற மாதிரி எங்களுக்கு பயம் . தெரிஞ்சவங்க யாராவதும் பாத்துட கூடாதுன்னு முகத்தை மறச்சு ரொம்ப கஷ்ட பட்டு படத்தை பாத்து முடிக்கற மாதிரி இருக்கும் . அப்போ rc middle school ல படிச்சுக்கிட்டு இருந்த தருணம் . (இப்போ high school ) பள்ளிக்கூடத்துல படம் பாக்க 3 ருபாய் கட்டணம் வசூலிச்சு கூட்டிட்டு போனாங்க . அப்போ விநாயகர் தியேட்டருக்கு தான் கூட்டிட்டு போனாங்க . அப்போ நம்ம அண்ணாச்சி சரத்குமார் நடிச்ச படம் ஓடிக்கிட்டு இருந்ததா நியாபகம் . (சரியாய் தெரிஞ்ச CLASSMATES இருந்தா சொல்லுங்க ). தியேட்டர் வெளியில டிசைன் டிஸைனா போஸ்டர் வளச்சு வளச்சு ஒட்டி வச்சுருந்தாங்க . சரத்குமார் மீசையை முறுக்கிக்கிட்டு கெத்தா போஸ்டர்ல இருந்தாரு. பையன் சரத் குமார் வக்கீல் லுக் ல இருப்பாரு. சரத் குமாருக்கு அம்மா ராதிகா அந்த படத்துல அப்போ . (இத எதுக்கு சொல்றன்னு புரியாதவங்க புரிஞ்சவங்கல கேட்டு தெரிஞ்சிக்கோங்க)

ஜாலியா தியேட்டர் குள்ள போனா அங்க எல்லாமே ஸ்கூல் பசங்க தான் . ஒரு 4 ஸ்கூல் பசங்க வந்திருப்பாங்க . படம் போடுறதுக்கு முன்னாடி அதுல அந்த படத்தை பாத்த ஒரு நண்பன் பயங்கரமா ஸ்டோரி சொல்ல சொல்ல நமக்கு அப்டியே ஆர்வம் பயங்கரமா ஆகும் . இந்த மாதிரி ஒரு பையன் எல்லாரோட ஸ்கூல் LIFE லயும் இருப்பான் . இன்னொரு TYPE நண்பன் இருப்பான் . அவன் படமே பாத்திருக்க மாட்டான். ஆனா 4 போஸ்டர் பாத்தது வச்சி ஒரு புது ஸ்டோரி அவனே CREATE பண்ணி சொல்லிடுவான். அதையும் அவன் கூட சுத்தி 4 பசங்க உக்காந்து கதையை கேட்டு பிரமிச்சு போய்டுவாங்க . இந்த மாதிரி ஒரு பையனும் எல்லாரோட ஸ்கூல் LIFE லயும் இருப்பாங்க . என் ஸ்கூல் லைப் ல அந்த பையன் மிஸ்டர் சுரேஷ் தான் . ஆமாம் அது நான்தான்.
.
ஓகே தியேட்டர் ல படம் போட போறாங்க படத்துக்குள்ள போவோம் . படம் ஆரம்பிச்சு பேரு போடுறப்ப என்னடா நம்ம அண்ணாச்சி , சரத் குமார், ராதிகா, ராதா ரவி எந்த பேருமே போடலையேடான்னு பசங்க மாத்தி மாத்தி கேட்டுப்போம். அதுக்கப்புறம் தான் தெரியும் அது டாக்குமெண்டரி பிலிம் ன்னு . அங்கயும் படத்துல பாடம் நடத்துறாங்களேன்னு வெறுப்பு பயங்கரமா வரும் . இதுலயும் நான் கொஞ்சம் பிட்டு பசங்க கிட்ட போடுவேன் . டேய் இடைவேளைக்கு அப்பறம் தாண்டா சரத்குமார் வருவான் ன்னு சொல்லிட்டு அந்த படத்துல எப்படியும் ஒரு ஸ்கூல் படிக்கிற பையன் தான் ஹீரோவா இருப்பான் . அடிக்கடி அவன் மூஞ்சு SCREEN வரதால அவன் தான் சின்ன வயசு சரத் குமார் , இடைவேளைக்கு அப்பறம் தான் அவன் வளருவான் அப்டின்னு பசங்கள ஆர்வ படுத்தி விடுவேன் . சில பசங்க போடா டேய் புளுகு மூட்டை னு சொல்லிட்டு போனாலும் நமக்குன்னு ஒரு நாலு பசங்க நம்ம சொல்றத கேட்குறதுக்கு தயாரா இருப்பாங்க.

அப்டியே படம் முடியுற வரைக்கும் அவங்கள ஒரு பதட்டமாவே வச்சுருப்பேன் . அப்பறம் என்ன பசங்க எல்லாம் வெளியில வந்ததும் வெளில ஒட்டிருக்க போஸ்டர் வெறிக்க வெறிக்க பாத்துட்டு வேதனையோடு போவோம் . அப்ப பசங்க டார்கெட் நான்தான் . எங்கடா அவன்னு என்ன தேடும் ஒரு பசங்க கூட்டம் .

அந்த நினைவுகள் இப்போ பின்னோக்கி போயி நெனெச்சு பாக்குறப்ப நாம அனுபவிச்ச சந்தோசம் கண்டிப்பா இந்த 2K கிட்ஸ் அனுபவிக்கலைன்னுதான் தோணும் .

எனது நினைவுகள் நீளும் இன்னும் இன்னுமென .........

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (22-Feb-20, 12:06 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 71

மேலே