நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்

பரதநாட்டியம் என்பது நம் பழந்தமிழ் நாட்டுக்குரிய நடனமாகும் .இது மிக தொன்மை வாய்ந்ததும் ,நம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பிரபலமானதும் ஆகும் .வரலாற்று நோக்கில் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம் .இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவானது . கூத்து ,ஆடல், நாட்டியம் ,தாசி ஆட்டம் ,சின்ன மேளம் ,சதிர் என்று பலப் பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது .

இது கடந்த எழுபது ஆண்டுகளாகத்தான் பரதநாட்டியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .பரதநாட்டியம் தமிழக கோவில்களில் தேவதாஸிப் பெண்கள் ஆட்டிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும் .நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞர்கள் தம் முகபாவனையில் நவரசங்களையும் வெளிக்கொணர்வர் .

மேலும் இதனை சிவபெருமான் ஆடியதாக ,108 கரணங்களாக குறிக்கின்றனர் .ஆணின் நடனம் தாண்டவம் என்றும் பெயர் பெறுவதால் ,இந்த கரண நடனங்கள் நூற்றியெட்டு தாண்டவங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன .நடனக்கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்தாராம் சிவபெருமான் .அப்போது ஆனந்தத்தாண்டவத்திற்கும் பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவங்கள் ஆடியதாக கூறுகின்றனர் .

நூற்று எட்டு தாண்டவங்களில்ன் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத பெயர்கள் இதோ :

மலரிடுகை -- தாழ்புஷப்புடம்

நுடங்குகை -- வர்த்திதம்

நொசி குறங்கு --வலிதொருகம்

கிளிகை நுடக்கம் -- அபவித்தம்

இணைப் பறடு -- சம நகம்

உரங்காய் ஒடுக்கம் -- வீனம்

குறுக்கிடு கையோச்சு --சுவஸ்திகா ரேசிதம்

உட்கொடு குறுக்கிடுகை -- மண்டலா ஸ்வஸ்திகம்

தட்டுத்தாள் -- நிகுட்டம்

சாய் தட்டுத்தாள் -- அர்த்த நுகுட்டம்

சூழவரை --கட்டிச்சன்னம்

கையோச்சு --அர்த்த ரேசிதம்

மார்பு குறுக்கீடு கை -- வாஸ்சவஸ்தீகம்

பித்தர் நடம் --உன்மத்தம்

குறுக்கிடு கைகால் --ஸ்வஸ்திகம்

சுழற் குறுக்கீடு -- திக்ஸ்வாசிதேகம்

நொடிப்பெடுப்பு --அலாதகம்

அரை நேர்பு --கடிசமம்

அதிர வீசும் கை-- ஆஷிப்த்ரேசிதம்

குறுக்கிடு கால் -- அர்த்த ஸ்வஸ்திகம்

மருட்கை -- அஞ்சிதம்

அரவச்சம் --புஜங்கத்ராசிதம்

முயங்க முழங்கால் --ஊத்வஜாநு

வளைகால் -- நிறுஞ்சிதம்

மத்தளிகை --மத்தள்ளி

வீச்சு மத்தளிகை --அர்த்தமத்தள்ளி

விட்டுத் தட்டல் -- ரெசித் நிகுட்டம்

பிறழ் குறங்கு -பாதப்பவித்தகம்

சுழலாக்கம்-- வலிதம்

சுழலகம் --கூரனிடம்

கோல்நடம் --தண்டபாக்ஷம்

அரவச்ச வீச்சு --புஜங்கத்ராஸ்திரேசிதம்

தண்டையாட்டு --நூபுரம்

பரிகாலசைவு --வைசாக ரேசிதம்

வண்டாட்டு --பிரமரம் சதுரம்

அரவோச்சு--புஜங்கஞ்சிதம்

கோலோச்சு -- தண்டர்சிதம்

கொட்டு தேள் --விருச்சிகக்குடிதம்

இடை நொசிப்புச் சூழல் --கடிபரந்தம்

தேள் இயக்கம் --லதா விருச்சிகம்

இயங்கிடை -- சின்னம்

தேள் எழுச்சி --விருச்சிக ரேசிதம்

தேளீ --விருச்சிகம்

அகல் நடம் --வியம்சிதம்

சிறகுமெட்டு --பார்ஸ்வ நுகுட்ட நம்

பொட்டிடுகை --லலாட திலகம்

ஒருக்களிப்பு--க்ராந்தம்

நோசிப்பு --குஞ்சிதம்

வளைப்பு --சக்கரமண்டலம்

உரம்பறுகை--உரோமண்டலம்

வீசு கால் கை -- அஷிப்தபதம்

அங்கால் விளக்கம் -- தளவிலாஸித்தம்

தாள்ப்பாள் --ஆர் கலம்

ஒருமுக நடம் --விக்ஷிப்தம்

சுழலும் நடம் -- ஆவர்த்தம்

அளவாடுகால் --டோல்ப் பாதம்

திருப்பகம் -- விவ்ருத்தம்

இருப்புத் திருப்பு --வினிவர்த்தம்

பக்க வீச்சு -- பார்ஸ்வக்ராந்தம்

நிலைப்பின்மை --நீசும்பிதம்

மின்னோர்பு -- வித்யுத் பிராந்தம்

விரிவியக்கம் -- அதிக்ராந்தம்

திருப்பகம் -- விவர்திதம்

களிராடல் --கஜக்ரீடிதம்

கொட்டடால் --தவசம்ஸ்போடிதம்

கலுழவியாக்கம் -- கருடப்லுதம்

கன்னளி --கண்டசூசி

ரிப்பாடல் -- பிரிவருத்தம்

பக்க முழங்கால் --பார்ஸ்வ ஜானு

கழுகியக்கம் -- க்ருத்ராவலீனம்

துள்ளல் கொட்டு -- சன்னதம்

நுனை --சூசி

நுனைக் குறிப்பு -- அர்த்த சுசி

துள்ளுமான் --சுசீவிதம்

திரி குறங்கு --அபக்ராந்தம்

மயில் நடம் -- மயூர வலிதம்

அரவியல் --ஸர்பிதம்

ஓங்கு கால் -- தண்டபாதம்

துள்ளுமான் -- ஹரிணப்லுதம்

துள்ளல் இயக்கு --பிரெங்கோலிதம்

நுசிப்பு -- நிதம்பம்

நழுவ கற்சி --ஸ்கலிதம்

துதிக்கை --கருஹஸ்தம்

ஊர்பு -- பற சர்ப்பிதம்

அரியாடல்-- சிம்ம விக்ரீடிதம்

கோளரி --சொம்மகர்சித்தம்

திருகுனடம் --உதவிருத்தம்

சார்பியல் --உபஸ்ருதம்

தட்டோட்டு -- தலைச்சங்காட்டிதம்

தோற்றம் --ஜேனிதம்

நெகிழாக்கம் -- அவாஹித்தம்

உருக்காட்சி --நிவேசம்

மறியாடல் --ஏலகாக்ரீடிதம்

குறங்காட்சி --ஊர்த்வருத்தம்

மயக்கு --மதசலிதம்

மாலடி --விஷ்ணுக்ராந்தம்

கலப்பகம் --ஸம்ப்ராந்தம்

நிலைப்பு -- விஷுக்கம்பம்

அடியொட்டாடல் --உதகட்டிதம்

காளையாட்டு -- வ்ருஷ்பக்ரீடிதம்

எழிற்சுழல் -- லோலிதம்

அரவெழுச்சி --நாகாபஸர்பிதம்

உருளி --சகடாஸ்யம்

பூவரு கங்கை --கண்காவத்ராணாம் .

எழுதியவர் : வசிகரன்.க (23-Feb-20, 12:47 pm)
பார்வை : 170

சிறந்த கட்டுரைகள்

மேலே