காதல் என்றால் என்ன

காதல் என்றால் என்னவென்று
கடவுளிடம் கேட்டேன்
அதற்கு அவன்
பூமியில் சென்று அனைவரிடமும் கேட்டுவிட்டு
பின்பு என்னிடம் வா என்றான்;

முதலில் ஷாஜஹானிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
அவன் மும்தாஜின் கல்லறையை காட்டி
இதுதான் காதல் என்றான்;

பின்பு தேவதாஸிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
அவன் பார்வதி நினைவாய் வைத்திருந்த
நாய்க்குட்டியை காட்டி இதுதான் காதல் என்றான்;

ஒரு கவிஞனிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
இரு இதயங்கள் உரசினால் உண்டாகும்
தீதான் காதல் என்றான்;

ஓர் இளைஞனிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
நம் சுவாசக்காற்றுதான் காதல் என்றான்;

ஒரு முதியவரிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
அது ஒரு புதைகுழி சிக்கிக்கொண்டால்
மரணம் நிச்சயம் என்றார்;

ஓர் அரசியல்வாதியிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
இரு இதயங்கள் கூட்டணி அமைத்தால்
அதுதான் காதல் என்றான்;

ஒரு தொழிலதிபரிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
அவன் காதல் என்றால் என்னவென்று
என்னையே திருப்பி கேட்டான்;

ஒரு பூசாரியிடம் சென்று
காதல் என்றால் என்னவென்று கேட்டேன்
அவன் அந்த தொல்லை நமக்கெதற்கு என்றான்;

மீண்டும் கடவுளிடம் சென்றேன்
கடவுள் என்னிடம் கேட்டான்
காதல் என்றால் என்னவென்று;

காதல் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு மாதிரி என்றேன் நான்;

கடவுள் கூறினான்
'உனக்கான பெண்ணை பார்க்கும்போதுதான்
நீ காதலை உணர முடியும்
அப்போதுதான் தெரியும் உனக்கு
காதல் என்றால் என்னவென்று'

காதலை உணர புறப்பட்டேன் நான்

'காதல் வாழ்க' என சொல்லிவிட்டு
கடவுள் மறைந்தான்;

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (23-Feb-20, 3:09 pm)
பார்வை : 54

மேலே