நினைவு காலண்டர் 2

எனது சென்னை வாழ்க்கையும்
கைபேசி டயலர் டியூன்களும்
கடந்து வந்த பாதை

சென்னையில் வேலைக்கு போன பின்பு நான் வாங்கிய கைபேசி அது என் கைகளில் தவழும் போது ஆனந்தம் .
3500 ரூபாய்க்கு நான் வாங்கிய முதல் keybad போன் வித் கலர் டிஸ்பிலே . கேமரா கிடையாது . எந்த சமூக வலைத்தளமும் கிடையவே கிடையாது .

அப்போது மெசேஜ் மட்டுமே பேமஸ்.
ஒரு நாளைக்கு 750 மெசேஜ் free . காலைல எந்திரிச்சி உடனே ஒரு அரை மணி நேரம் கைபேசிக்கு ஒதுக்கி நட்பு வட்டம் அனைத்திற்கும் good morning மெசேஜ் தட்டி விட்ட பின்பு தான் அடுத்த வேலை .
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நான் எத்தனை பேருக்கு குட் மோர்னிங் மெசேஜ் அனுப்புவேனோ அத்தனையில் 90 % ரிப்ளை வந்து விடும் .

அதன் பிறகு உள்ள மெசஜ்கள் நம்மை நெருங்கியவர்களுக்காக உரையாடலில் ஒதுக்கப்பட்டு ஆடுவோம் ஆடுவோம் மெசேஜ் தீரும் வரை உரையை ஆடுவோம்

. நட்பு வட்டத்தில் யாராவது ஒரு நண்பன் நமது மெசேஜ் கு பதில் தராமல் நிறுத்தியிருப்பான் என்றால் அவன் கமிடெட் என்று அர்த்தம் .
அதுக்கப்பறம் அவனுக்கு அந்த 750 பத்தாமல் தீர்ந்து போக நள்ளிரவு 12 மணி வரை தூங்காமலிருந்து மறுபடியும் இரவிலிருந்து கடலை போட்டு தூக்க கலக்கத்தில் வேலைக்கு வருவான் .
அன்று முக நூல் தாக்கம் மிகப்பெரும் வசதி படைத்தவர்களிடமே இருக்கும் . கமிட் ஆகாத நாங்கள் சில பேர் பேங்க் இல் 3 முதல் 4 accounts வரை வைத்திருப்போம் . அனால் முக நூல் அக்கௌன்ட் துவக்க பல ஆண்டுகள் ஆனது.

ஒரு நிஜ உண்மை .
அப்போது நான் ஏமாத்தப்பட்டிருக்கின்றேன் சிலரால் . கொஞ்சம் நல்ல போன் வாங்கிய பின்பு அதில் facebook அக்கௌன்ட் ஓபன் பண்ண தெரியாமல் தெரிந்த நண்பர்களிடம் டேய் fb ல அக்கௌன்ட் ஓபன் பண்ணி கொடுக்க கேட்டால் அவன் போடுவான் பாரு சீனு யப்பா அத நெனச்சா இப்பவும் அவன போட்டு சாத்தானும் போல இருக்கும் .
fb அக்கௌன்ட் ஓபன் பண்ண ரேஷன் கார்டு xerox , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அப்பறம் 150 ருபாய் பணம் னு என்கிட்ட வாங்கி ஓபன் பண்ணி தந்தான் .இது நிஜம் ங்க . சத்தியமா ஒரு 6 மாசம் வரைக்கும் எனக்கு ஏமாந்த விஷயம் தெரியல . அப்பறம் தெரிஞ்சதும் அவன்கிட்ட போயி கழுவி கழுவி ஊத்தினேன் .

என்னதான் அங்க நட்பு வட்டத்துக்குள்ள நாங்க ஏமாத்திக்கிட்டாலும் அடிச்சிக்கிட்டு மண்ணுல விழுந்து புரண்டாலும் ஒரு வார்த்தைல ஒண்ணாயிடுவோம் .
அந்த வார்த்தை "அடிக்காத மச்சான் நாம இன்னைக்கு சரக்கு சாப்புடபோறோம் அதுவும் என் காசுல"
நண்பேன்டா ன்னு கட்டிபுடிச்சு ஒண்ணா கூடிடுவோம் . இந்த சரக்கு டாபிக் ரகசியங்களை முற்றுப்புள்ளி வச்சுக்குறேன் இதோட .

நான் கொடுத்த தலைப்பு பக்கம் வருகிறேன் .

நட்பு வட்டங்கள் ஒவ்வொண்ணா கமிட் ஆகிகிட்டே போக தலைவரும் ஒரு நாள் கமிட் ஆனார் . நான்தான் அந்த தலைவர் .
அப்போல பசங்க comited னு தெரிஞ்சுக்கனும்னா அவனுக்கு போன் பண்ணுனா ஓடுற டயலர் tune காட்டிக்கொடுத்துடும் . அந்த commited புட்டுக்குச்சி ன்னா அதும் callertune கட்டி கொடுத்துடும் . for example பிக்கப் அண்ட் ட்ராப் songs .
"என் மேல் விழுந்த பனி துளியே இதனை நாளை எங்கிருந்தாய்......" அண்ட் என் கதை முடியும் நேரமிது " போன்ற விதங்களில் .

எனது முதல் டைலர் டூன் "என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை "
அது ஆறு மாசம் ஓடுன படம். அந்த படம் முடிஞ்சதும் மாற்றப்பட்ட சாங் "விடுகதையா இந்த வாழ்க்கை ......"

அடுத்த புது பட பாடல் "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோஜா பூ "
இந்த படம் 3 மாசத்துல புட்டுக்கிச்சு .
அப்பா மாத்துன பாட்டு "பொம்பளைங்க காதலை தன நம்பி விடாதே ..."

அதுக்கப்பறம் பாட்டு மாத்த 7 மாசம் ஆச்சு.
'என்னமோ செய்தாய் நீயே என்னதான் செய்தாய் நீயே ...." பாடலுடன் சென்னை வாழ்க்கை முற்று பெற்றது .

அவ்வப்போது எனது நினைவலைகளை வங்கியில் சேமிப்பது போல இணையத்தில் சேமித்து வைக்கிறேன் .

மீண்டும் ஒரு நினைவலையில் ......


-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (24-Feb-20, 12:03 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 83

சிறந்த கட்டுரைகள்

மேலே