மெளனியின் சித்திரம்

ஈரம் இல்லா இருள் துகள்கள்
காட்டு அறைக்குள் கொட்டப்பட்டு கிடக்க...
அவன் கத்தரி நினைவுகளால்
கீறப்பட்ட காகிதமாகிறாள்....

கற்கண்டு இயல்புகளை எல்லாம்
கரைத்து அருந்த முடியாத
சோகப் பாணத்தை
இரவுப் பானையில் காய்ச்சுகிறாள்..

அவன் வானப் பிள்ளைகளை
சாட்சியாக வைத்து..
கண்களின் மணலில் புதைத்த
எதிர்கால சிப்பிகளை
இமைத்து பார்க்கிறாள்...

அவள் நெஞ்சோர தொட்டிலுக்குள்
அவன் மழலை ஆடிய வார்த்தைகளுக்கு
இன்றும் அரும்பதம் தேடி
இளைத்துப் போகிறாள்....

வரண்டு வடியும் மரத்தில்
காய்ந்த இலைகள் தற்கொலை
செய்வதை போலவே இவள்
உயிரும் ஒவ்வொன்றாக தற்கொலை செய்கிறது...

கண்ணீரின் துளிகளை
உடையாமல் நகர்த்தி
அவளை மட்டும் பேசும்
மெளன சித்திரம் வரைகிறாள்...

கடலின் நடுவில் இருந்து
கரை பார்க்க முடியாத
தெப்பம் போலவே
அவள் நிலை ஆகிவிட்டது.....
(இஷான்)

எழுதியவர் : இஷான் (24-Feb-20, 7:36 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 71

மேலே