தென்றலே

தென்றலே.....

பூக்கள் அடர்ந்த வாவியில் ஊடுருவி...
அலர்ந்த அத்தனை மொட்டுக்களையும்....
மன்மத மாய பரிசத்தில் வீழ்த்துகிறாய்....
இதழ் சுரந்தத் தேனையும்....
மடல் விரித்த வாசத்தையும்....
ஒட்டுமொத்தமாய் சூரையாடி கடக்கிறாய்...

வந்த வழிமறந்து போகும் உன் துஷ்யந்தக் காதல் அறிந்தும்...
ஒற்றை மலர் மனமொன்று
உன்னிடமே சஞ்சரிக்கிறது....

அடையாளக் கணையாழியை தேடியபடி
மகர்ந்தம் சேர்க்க வந்த வண்ணத்துப்பூச்சியிடமும்
மதுரத்தை ருசிக்கவந்த வண்டுகளிடமும் தப்பி
உன்னிடமே தஞ்சம் நாடுகிறது.....

சருகாகி உதிர்ந்திட ஒருசில நிமிடங்களே...
சஞ்சலம்விட்டு சாந்திசெய நீ அணைத்தால்.....
சங்கமத்தில்
அதன்காதல்
சாகாவரம் பெற்றிடும்....
இன்றேல் சவமாகி சமாதியில் உறங்கி
உயிர்த்தெழும் நாளுக்காய்
உறுதியுடன் காத்திருக்கும்!

எழுதியவர் : வை.அமுதா (24-Feb-20, 9:06 pm)
Tanglish : thentralae
பார்வை : 72

மேலே