மேனியெங்கும் உன் வாசம்

உன் கயல் விழிகளை
ரோஜா இதழ்களை
செம்மாங்கனிக் கன்னங்களை
கண்டு மதிமயங்கி என்னை
மறந்து நானிருந்த தருணம்
என் நிலை அறிந்து கேட்காமலேயே
என்னை அள்ளியணைத்து நீ
தந்தையாயே ஓர் தேன் முத்தம்
இன்னும் காயாமல் என் இதழ்களில்
ருசியோடு பிரண்டு கிடக்குதடி
என்னை அணைக்கும் போது
என் உடையில் பட்ட உனது
வாசனையை முகர்ந்து முகர்ந்து
கழுவாமல் வைத்திருக்கிறேனடி
இன்னும் அந்த மேல் சட்டையை
தீபாவளிப் புத்தாடையை
மணம் போய்விடுமோவென
கழுவாமல் காக்கும்
ஏழு வயதுச் சிறுவன் போன்று

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (26-Feb-20, 4:05 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 43

மேலே