உன் பார்வை

நீண்டு அகன்ற உந்தன் அழகிய விழிகளில்
முதல் முதலாய் நம் பார்வை சந்தித்தபோது
மானின் மருட்சி கண்டேன் காதல் கனிந்தது ;
பின்னே இது என்ன மாயம் இன்று உந்தன் விழிகளில்
நான் காண்பதோ ஓர் கள்ளச்சிரிப்பு
உந்தன் பார்வைக்கு சிக்கிய விட்டில் நான்
என்பதுபோல் .... நீ இதை அறிவாயோ நான் அறியேன்
கொஞ்சம் கற்பனையில் மிதந்தேன் நான்
நாளை என் பார்வை தவறி வேறோர் பெண்ணின்
மீது விழுந்தால் உன் பார்வையில் ரௌத்திரம்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (27-Feb-20, 9:11 am)
Tanglish : un parvai
பார்வை : 75

மேலே