பட்டிணி கொடுமை

பட்டிணியால் இறப்பவர்கள் அணுபவிக்கும் வேதனைகளை அறிந்ததுண்டா
உயிர் உடலை விட்டு பிரியும் முன்னர் அணுபவிக்கும் அந்த வேதணை கொடியது
அது எப்படி இருக்கும் தெரியுமா?
முழுமையான உணவு இல்லாத போது முதல் முப்பது மணி நேரம் பசிதான் எடுத்துக் கொண்டிருக்கும்
அதற்கு பின்தான் வயிற்றில் வலி ஏற்படும்
தீராத தண்ணீர் தாகம் ஏற்படும்
நான்கு நாட்கள் ஆன பிறகு தோலில் இருக்கும் கொழுப்புகள் யாவும் மறைந்து விடும்
ஆகவே தோலில் சுருக்கங்கள் ஏற்படும்
கண் உள்ளே சென்று விடும்
கண்ணம் வற்றி விடும்
இதனால் முக எலும்புகள் முன்னோக்கி தள்ளப்பட்டதாக தெரியும்
உதட்டில் வெடிப்பு ஏற்படும்
மூச்சு கெட்ட வாடை வீசும்
பேச்சு வரும் ஆனால் வெளியில் கேட்காது
உடம்பில் சூடு குறைந்து காணப்படும்
முதலில் மலச்சிக்கல் இருக்கும்
மிகவும் மோசமான நிலை ஏற்படும் போது வயிற்று போக்கு ஏற்படும்
சிறுநீர் குறைவாக வெளியேறும்
இது அதிக நிறமாகவும் காணப்படும்
எடை குறைந்து கொண்டே வரும்
ஐந்தில் இரண்டு பங்கு எடை குறையும் போது 40 சதவீத உயிரழப்பு ஏற்படும்
இறுதிவரை புத்தி தெளிவாக இருக்கும்
இறப்பதற்கு முன்னர் வலியும் மீளாத் துக்கமும் ஏற்படும்
ஒரு வேளை உணவு உண்ணாமலும் அல்லது உண்ணாவிரதம் என்ற பெயரில்
ஒவ்வொருவராய் சென்று சாப்பிட்டு வரும் முறையும் கொள்பவர்கள் பசியின் வேதனை அறிய நிச்சயம் வாய்ப்பில்லை
ஆண்டுக்கு ஒரு முறை பட்டிணியால் இறப்போரின் கணக்கு வழக்கு மட்டும் அரசு வெளியிட தவறுவது இல்லை
இவர்கள் எல்லாம் உண்ணா நோண்பு இருந்து இறந்தவர்களா
இல்லை உணவின்றி இறந்தவர்கள்
பஞ்சம் பசி பட்டிணி இவைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் உணவின்றி நீரின்றி ஒரு வார காலம் தொடர்ந்து தமிழக மந்திரிகள் விரதமிருக்கட்டும்
அப்படியாவது பசியின் அருமை உணர்ந்து பட்டிணிக் கொடுமையால் வாடுவோர்களை காக்க முயல்வார்கள்

எழுதியவர் : (27-Feb-20, 9:44 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 73

மேலே