இந்தியாவின் வசந்தகாலம்

லட்சுமி அக்கா...
குழந்தைய தூக்கிட்டு எங்க போறீங்க...?

அது ஒன்னுமில்லடா தம்பி...
குழந்தைக்கு உடம்பு சரியில்ல...

அதான்... மசூதி வரைக்கும் போயிட்டு மந்திரிச்சுகிட்டு வரலான்னு...

ஏங்கா...
நம்ம கோவில்ல மந்திரிக்க வேண்டியது-தான...

தம்பி...
நம்ம கோவிலுக்கு போயிட்டு வந்துட்டப்பா...
இருந்தாலும்...
குழந்தைக்கு உடம்பு முடியல...
அதான் மனசு கேக்கல...
மசூதிக்கும் கிளம்பிட்ட...

அப்டியா...
எங்கடா நீங்க மாறியிட்டிங்களேன்னு நினைச்ச...

தம்பி... என்னை பொறுத்தவரைக்கும் எல்லா தெய்வமும் ஒன்னுதான்...
அந்த காலத்துல மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் :- 'ஒன்றே குலமென்று பாடுவோம்... ஒருவனே தேவனென்று போற்றுவோம்...' அப்டின்னு பாடலியா...?

ஏன் நம்ம புயல்-பூகம்பம்-தீ விபத்து அப்டின்னு இயற்கை சீற்றம் வரும்போது.. மதங்களை கடந்து , ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிறோம்ல....

'வேற்றுமையில் ஒற்றுமை' நிறைந்தது தான- நம்ம இந்திய தேசம்...

யாதும் ஊரே யாவரும் கேளிர் அப்டின்னு சொன்னதே நாமதானப்பா...

அதுமட்டுமில்ல மகாகவி பாரதியும் :-

"அன்பிற் கினிய இந்தியா! அகில
மதங்கள், நாடுகள், மாந்தருக் கெல்லாம்
தாயே!......................... "அப்டின்னு...பாடியிருக்காரு...

ஆனா இன்னிக்கு நடக்கிறதுலா நினைச்சா...
மனசு ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா....
உலகத்துக்கே அகிம்சைய கத்துகொடுத்தது... நம்ம தேசம்....
ஆனா இன்னிக்கு... காெரோனா வைரஸவிட மோசமானத..
பிரிவினைங்கிற வைரஸ் பரவுது...
அது மாறனும்...
அமைதியான முறையில எல்லாத்துக்கும் நல்ல தீர்வு கிடைக்கனும்...
அப்பதா நம்ம தேசத்துக்கே வசந்தகாலம்....
நான் வரம்ப்பா... நேரமாச்சு...
முடிஞ்சா இந்தா...
இத படி...
நான் வர...

ம்... சரிக்கா... நீங்க குழந்தைய பாருங்க...

என்ன எழுதியிருக்கு... இதல...

கவிதை : "எல்லாம் ஒன்றுதான்...."

அதிரூபரோ - 
அத்திவரதரோ - 
அருவமானவரோ -
எல்லாம் ஒன்றுதான் -எனக்கு
எல்லாம் ஒன்றுதான்

மனங்கள் மதம் பாா்க்காதவரை
கைகள் மதம் பாா்ப்பதில்லை
எல்லாம் ஒன்றுதான் -எனக்கு
எல்லாம் ஒன்றுதான்

வாழ்க்கைப் பாதையைக் கடக்க
திருக்குரானும் படித்திடுவேன்
பைபிளும் படித்திடுவேன்
பகவத் கீதையும் படித்திடுவேன்
எல்லாம் ஒன்றுதான் -எனக்கு
எல்லாம் ஒன்றுதான்

துன்பங்கள் சூழ்ந்த நிலையிலும்
இதயம் வலிகொண்ட நிலையிலும்
இறை பேதம் பாராமல்
இறைவன் எண்ணங்களே சூழ்ந்திருக்கும்
எல்லாம் ஒன்றுதான் -எனக்கு
எல்லாம் ஒன்றுதான்

தரணியில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்
தோற்றுவிக்கவே விவேகானந்தரும் தோன்றினார்...!
அண்ணல்  நபிகளும் தோன்றினார்...!
அன்பிற்குரிய அதிரூபனும் தோன்றினார்...!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

" ஒன்றே குலம் ஒருவனே தேவன் "

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (27-Feb-20, 11:32 am)
பார்வை : 136

மேலே