449 சாகும் காலத்து அறம் செய்தல் யார்க்குமே இயலாது - அறஞ்செயல் 1

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

பசிமிகுந்த பின்நெல்லை விதைப்பதுபோல் வீட்டில்தீ
..பற்றிக் கொண்டு
நசியும்போ ததையவிக்க வாறுவெட்டல் போலும்போர்
..நடக்குங் காலை
விசிகநூல் கற்கமுயல் வதுபோலுங் கபமிஞ்சி
..விக்கிச் சிக்கி
இசிவுகொண்டு சாங்காலத் தெப்படிநீ யறம்புரிவா
..யிதயப் பேயே. 1 அறஞ்செயல்

- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சப் பேயே! கோழை மிகுந்து, தொண்டை அடைத்து விக்கி, கை கால் இழுத்து சாகப் போகும் இறுதிக் காலத்தில் எப்படி நீ அறச்செயல்களைச் செய்வாய்?

அவ்வாறு கருதுவது, ஒருவன் பசி மிகுந்த பின் வயலில் நெல் விதைப்பது போலவும், வீடு தீப்பற்றி அழியும் போது அதை அணைக்க ஆறு வெட்டுவது போலவும், போர் நடக்கும் போது படை நூல் கற்பது போலவும் அல்லவா ஆகும்” என்கிறார் இப்பாட லாசிரியர்.

நசிதல் - அழிதல். விசிகநூல் - படை நூல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Mar-20, 3:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே