மகளிர் தினம்

மண்ணில் பிறந்த மழலையதை
மயக்கத்துடன் மடி மீதமர்த்தி
அன்னையவள் அமுதூட்டி
தொட்டில் பந்தம் தொடரும்முன்னே
பிறந்த மழலையதை
குலம் தழைக்கப் பிறந்த
குலமகளென்றதும் குற்றமென கருதி
கள்ளிப்பால் கொடுத்து
கல்லறைக்கு அனுப்பிய
காலம் அன்று......

ஆனால்......
பாரதி கண்ட புதுமைப்பெண்னென
பகுத்தறிவுடன் பட்டம் பலபெற்று
பாராளும் பெண்ணினத்தின் பெருமை போற்றும்
பாவையர் தினம் இன்று.

எழுதியவர் : ஆர் கருப்பசாமி (9-Mar-20, 10:33 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : makalir thinam
பார்வை : 40

மேலே