அவன் ஓர் அபூர்வ பிறப்பு

'அவன்'
ஓர் அபூர்வ பிறப்பு!

தான் காணா உலகை
நாம் காண
தன் தலை மேல்
அமர வைத்து அழகு பார்ப்பவன்!

தன்னலம் கருதாத தங்கம் அவன்!
சுமைகளை சுகமென சுமக்கும்
சுயநலமற்ற ஓர் ஜீவன் அவன்!
வாழ்வின் தான் கற்ற பாடங்களை
பாசத்தோடு சொல்லிதரும்
ஆசான் அவன்!
வாழ்க்கை எனும் பயணத்தில்
நம்மை நல்வழியில் நகர்த்தி செல்லும்
நாணயமான நண்பன் அவன்!
பொய் கோபக்காரன்!
நம் ஆசைகளை
அவன் ஆசைகளாய் கொண்டவன்!
தகரமாய் அவன் இருந்து
நம்மை பொக்கிஷமாய் காப்பவன்!!!
"அப்பா"

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 1:57 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 2874

மேலே