மௌனம் பேசியதே
வார்த்தைகள்...
இன்றி , கட்டி
வைக்கும்
திறமை
உன்னிடம்
மட்டுமே....
மௌனமாகவே
இருந்திட
நினைத்தும் ,
சலசலக்கும்
நதியாக உன்
எண்ணங்கள் ...
விழித்திருக்கும்
உறக்கத்திலும் !....
இன்றும் ;
இன்னும்....
மௌனமாகவே
உணர்கிறேன்
உன்னை !.....
சொல்லற்ற
மொழிகளின் ;
அர்த்தமான
சூழ்ச்சியை ;
காணுகையில்
வியந்தேன்
என்னிடம் !...
உன் நினைவுகளில்
மூழ்கி யிருப்பதும் ;
எனக்கு..
மௌனமாகவே
சம்மதம்.....
பின்னி....
பிதற்றி....
பேசும் .....
வார்த்தைகளும்
மௌனத்தில்
காணும் ;
போது....
முழுமை பெறாத
சித்திரம்
என்றே ...
மௌனம்
சொல்லியது....
🌹💐🌹