கையெறி குண்டை வீசுடா

அண்ணே நீங்க நம்ம கட்சில சேந்து பத்து வருசம் ஆகுது. இன்னும் நீங்க பிரபலமாகாம இருக்கிறீங்க. உங்கள பிரபலமாக்க என்ன செய்யலாம்.
@@@@@@
இதென்னடா தம்பி பெரிய விசயம். நீ செய்தித்தாள்களைப் படிக்கிறதில்லையா?
@@@@@@
படிக்கிறேன். நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
@@@@@@@
அட தம்பி நாம புதுசா செய்யவேண்டிய விசயம் எதுவும் இல்லை. சில நபர்கள் அவங்க காருக்கு அல்லது வீட்டுக்கு தீ வச்சிருவாங்க. உடனே காவல் நிலையத்துக்கு தொலைபேசி யாரோ தீ வைத்துவிட்டார்கள்னு புகார் குடுப்பாங்க. காவல் அதிகாரிங்க வருவாங்க. அதுக்கு முன்னதாகவே நிருபர்கள் வந்திருவாங்க. அன்று மாலையே எல்லா செய்திகள்லயும் அந்த நபரின் பெயர், பேட்டி எல்லாம் வெளியாகும். இதுதான் ஒருவர் திடீர் பிரபலமாக நல்ல ஒரே வழி.
@@@@@@
சரி நாம என்ன செய்யலாம்?
@@@@@@
பழைய மோட்டார் சைக்கிளை வாங்கிட்டுவா. நம்ம வீட்டு வாசல்ல நிறுத்திவை. எவனாவது ஒரு ரவுடிகிட்டச் சொல்லி அவங் கேக்கற பணத்தைக் குடுத்திடு. சரியா இரவு பன்னிரண்டு மணிக்கு கையெறி குண்டு ஒண்ணை அந்த இத்துப்போன காயலாங்கடை மோட்டார் சைக்கிள்கள் மேலே கையேறி குண்டை வீசிட்டு ஓடிப்போகச் சொல்லு. அதுக்கப்புறம் நாம பாத்துக்கலாம். நாளைக்கே நான் நம்ம கட்சில பிரபலமாகிடுவேன். நம்ம கட்சில எனக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இதுதான் நாட்டு நடப்பு. இன்னிக்கு காலை டிவி செய்திலகூட ஒரு நபர் அவருடைய வண்டிக்கு அவரே தீ வைத்துக் கொளுத்தினாருன்னு சொன்னாங்க.
அரசியல்ல இதெல்லாம் சகசம்டா தம்பி.
சரி சொன்னபடி செய்.
@@@@@@@
சரிங்க அண்ணே.

எழுதியவர் : மலர் (12-Mar-20, 9:15 am)
பார்வை : 115

மேலே