நாணும் பெண்

என்னைக் காணத்தான்
அருவியாய் - அவள்
துள்ளிக்குதிக்கிறாள்

கண்னணில்பட்டதும்
ஏனோ - பூவாய்
தலை குனிந்து கொள்கிறாள்?

நாணும் பெண்னென்று
தினம் - நாணி நிற்கிறாள்
தமிழர் கலச்சாரத்தை
இன்னும் தூக்கி நிறுத்துறாள்

மனதுக்கு பிடித்தவன் என்றாலும்
பண்பாட்டை மீற மறுக்கிறாள்
நேருக்கு நேர் நின்று வென்றாலும்
அவள் வெட்கத்தை வீழ்த்ததான்
என் உதவியைக் கேட்கிறாள்...!

விரும்பி தாலி கட்டியவன்
உதவாமல் இருப்பானா?
இன்பம்
வேண்டாமென்று மறுப்பானா?

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Mar-20, 5:12 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 59

மேலே