கொரோனா நீ ஆத்திகமா நாத்திகமா

காக்க காக்க காக்க என்று
நாத்திகனையும் பாடவைத்த நீ
ஆத்திகம் சார் வைரலா ?
COVID19 என்று உருவெடுத்து
கோவில் கதவுகளையும் மூடவைத்த நீ
நாத்திகம் சார் வைரலா ?
நீ யாராயினும் எதுவாயினும்
கொரோனா டார்லிங்
நீ ஆடியதும் போதும் அழித்ததும் போதும்
மண்ணில் மானுடத்தை வாழ விடு
விரைவில் விடைபெற்றுச் சென்றிடு
கருணை செய்வாய் திகில் தேவதையே கொரோனா !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-20, 6:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 305

மேலே