எனைதீண்டும் பூங்காற்றே...

எனைதீண்டும் பூங்காற்றே...
வடிந்தோடும் நீரூற்றே...
விரைந்தோடும் விண்மீனே...
சிரித்தோடும் பெண்மீனே...

எந்தன் கண்ணிற்கு
உன்னை இரையாக்கி-இந்த
உலகத்தில் வாழ்வேன் நான்...
காலை கதிரொளியாய்
உந்தன் பிம்பத்தை-என்றும்
உனைபார்த்து ரசிப்பேனே...
சொட்டும் என்னுயிரை-உந்தன்
உயிரோடு சேர்த்து
உயிரொன்றை செய்வேனே...
கன்மணியே...


உலகத்தில் கடல்போலே
வற்றாத நதிசெய்து...
மனதிற்குள் நாள்தோரும்
உனை நீந்த விடுவேனே...
அழகான செந்தமிழில்
அலைமோதும் உன்னழகை
வர்ணித்து கவிதையொன்றை
ஊரெங்கும் சொல்வேனே...
உன்மேனித் தூவும் மழையில்-நான்
நனைந்தே நிற்பேனே!
என்தேகம் கொஞ்சம் குளிர்ந்தால்-உன்
குடைக்குள் செல்வேனே!

நான்சாகும் நேரம்வரை உன்மடியில்-தினம்
சாய்ந்து சுகம்கொள்ள வருவாயா?
உன்னிதயம் துடிக்கின்ற துடிப்புகளை-நான்
எண்ணிக் கொண்டிருக்க விடுவாயா?

தனியாக தடுமாறும் என்னுயிரை-உன்
பிள்ளைபோல் அணைக்க வருவாயா?

எழுதியவர் : sahulhameed (19-Mar-20, 11:20 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 85

மேலே