குதிரைக்கும் ஆட்டுக்கும்

நேரிசை வெண்பா

கொம்பிலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவியில் நன்னடைய தாதலால் – உம்ப(ர்)களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங் குதிரையுநே ராம். 65

- கவி காளமேகம்

பொருளுரை:

தேவர்களும் தேடிவந்து மகிழும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே ஆடும் குதிரையும் தம்முள் ஒன்றற் கொன்று சமானமாகும். எங்ஙனமெனில்,

ஆடானது: நுனிக்கொம்பிலுள்ள இலைகளையே தனக்குத் தீனியாகத் தின்பதனாலும், அதன்பின் அப்படித் தின்றபின்பு அதனை உண்பதற்காக வெட்டுவதாலும், அழகான இவ்வுலகிலே ஒன்றைப் பின்பற்றி மற்றொன்றும் நடந்து போகின்றதான அத்தகையவொரு அழகிய நடையினையும் உடையது.

குதிரையானது: கொம்பு இல்லாதது; தனக்கு வைக்கும் தீனியைத் தின்பது, வீரர்கள் அதன்மேல் ஏறிக்கொண்டு சென்று மாற்றாரை வெட்டி அழிக்க உதவியாயிருப்பது; அழகிய உலகிலே நல்ல அழகான நடையை உடையது;

ஆதலால், இவை இரண்டும் சமம் என்க. கதி - வேகம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-20, 8:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே