கனவில் காதல்🌹

கனவில் காதல்🌹

ஆஹா! என்ன ஒரு அழகு .
ஒரு கோடி நட்சத்திரம் ஒரு சேர நடந்து வந்த அழகு.
ஒரு கோடி வண்ணப்பூக்கள் ஒட்டு மொத்தமாக பார்த்த அழகு.
சிற்பி அவன் ரசித்து செதுக்கிய வண்ணச்சிலையின் அழகு.
பிரம்மன் தன் திறமை அத்தனையும் செலுத்தி படைத்த அவள் அழகோ அழகு.
ரம்பை, ஊர்வசி, மேனகை என்ற தேவதைகளுக்கு சவால் விடும் அவள் மிகவும் அழகு.

மண்ணவனே உறக்கமா?
உன்னை என்று கண்டேனோ அன்றே என் உறக்கம் மறந்தேன்.
உன் மாய கண்களால் என்னை மயக்கிவிட்டாய்.
காண குயிலே!
உன் மதுர குரலால் என்னை முழுவதும் ஆட்கொண்டாய்
எழில் நிலவே வா அருகில்.
முத்திரை பதிக்க இதுவே முத்தான நேரம்
சத்தான நம் காதலை கவிதைகளாக உன் இதழ் வரிகளில் எழுதுவேன்.
இன்ப மது குடமே
தெள்ளுத் தேன் அமுதே!
கன்னி மயிலே!
வண்ண ஓவியமே!
பக்கத்தில் வா!
பார் புகழும் காதலை பயில்வோம்.

சிங்கார வள்ளியே!
என் சீர் மிகு காதலியே!
உன் முந்தானை விலகியதால்
என்னுள் முன்னூறு கவிதை பிறந்தது!
மாதுளை இதழாளே!
வஞ்சி கொடியே!
வஞ்சனை ஏன்
வா அருகில் வாலிபம் பழகுவோம்.

முக்கனி இதழில், முத்தத்தில் காதல் பாடம் இன்பமுடன் தொடங்க
இளமை அது விஸ்வரூபம் எடுக்க
வாலிபம் கொண்டாட தொடங்கியது.
இடை வளைத்த இளவல்,
கொடி போல் படர்ந்த இடையாள்.
கரு மேகம் அது அன்புடன் உரச.
காதல் அது கனிந்து,
மோக இடி இடித்தது,
ஆசை மின்னல் வெட்ட
பூவானம் பண்ணீர் பொழிய
பூமி அது ஆனந்தத்தில் கூத்தாடியது.
மழையில் நினைந்த பூக்கள்
ஆடையற்று தவிக்க
குளிர் காற்று வந்து போர்வையாய் தழுவியது.
தேன் உண்ட வண்டு
ரீங்காரம் செய்ய.
காற்றில் அசைந்த நாணல் தள்ளாட,
மீண்டும் ஒரு முறை தழுவிய தென்றல்,
முடிவுரை இல்லா உறவை தொடர்ந்தது.
- பாலு.

எழுதியவர் : பாலு (21-Mar-20, 5:09 pm)
சேர்த்தது : balu
பார்வை : 331

மேலே