போதும்
போதும் உன் ஆட்டத்தை நிறுத்திவிடு
நாங்கள் பெற்றது ஒரு வாழ்க்கை
அதை
வாழ்ந்துவிட்டுப்போக எங்களை அனுமதி
கலவரபூமியாய் உலகம் மயான அமைதி
எங்கும்
நாங்கள் அழித்தது உண்மைதான் அது
சுயநலமும் பொதுநலமும் கலந்தது
காண முடியாது போய்விட்ட கடவுளிடம்
முறையிட முடியாததால்
உன்னிடமே எங்கள் கோரிக்கை