மனிதனின் சிறைவாசம் பறவைகளின் பார்வையில்

பரந்து விரிந்த பூமிதனில்
சிறகடித்து பறக்கின்றோம்
ஆனந்தமாய் மரங்களிலே
ஊஞ்சல் கட்டி ஆடுகின்றோம்

எந்தவித பயமுமில்லை
உல்லாசமாய் திரிகின்றோம்
கடவுளுக்கு என்றென்றும்
எங்கள் நன்றியினை சொல்கின்றோம்

சிறைவாசம் என்பதன்
வீரியம் அறிந்திடுவீர்
எத்தனை கொடிய செயலது
என்று சிந்தித்து உணரந்திடுவீர்

காலநேரம் யாவர்க்கும்
ஒருபோல இருக்காது
வாழ்க்கை சக்கரமும்
மாறி மாறி சுழன்றிடுமே

எங்கள் குடும்பத்தில் அனைவருமே
சொந்த பந்த உறவோடு
கூடி கூடி பேசுகிறோம்
கும்மாளம் போடுகிறோம்

எங்கள் இஷ்டம் போல்
வாழ்வதனை வாழுகிறோம்
உங்கள் நிலை பார்த்து
பரிதாபப் படுகின்றோம்

வீட்டிற்குள்ளே நீங்களும் தான்
அடைபட்டு கிடக்கின்றீர்
எத்தனை நாள் இது நீளுமென்று
புரியாமல் தவிக்கின்றீர்

பழிக்கு பழி தீர்க்க
இது ஒன்றும் நேரமல்ல
உங்களுக்கு உதவி செய்ய
தயாராய் இருக்கின்றோம்

உங்களுக்கு என்ன வேண்டும்
தயங்காமல் கேளுங்கள்
உங்கள் வீடுவரை கொண்டு வந்து
அதை நாங்களும் சேர்க்கின்றோம்

இக்கட்டான நேரத்திலே
உதவுவது நல்ல குணம்
அது எங்களுக்கும் உண்டென்று
நீங்களும் உணர வேண்டும்

உங்கள் வீட்டின் முற்றத்தில்,
கதவருகில், ஜன்னலிலும்,
நாங்களும் காத்திருப்போம்
உங்களுக்கு உணவுகளை
கொண்டு வந்து சேர்ப்பதற்கு

ஆண்டவன் படைப்பினிலே
எல்லோரும் சமமேதான்
ஐந்தறிவு, ஆற்றிவு என்கிற
பேதம் எதுவுமில்லை

உங்களின் இந்த அவல நிலை
மாற வேண்டும்
எங்கள் பிரார்த்தனையால்
அது சீக்கிரமே நடந்திடுமே

நட்பே பெரிதென்று நம்பும் மானிடரே
நட்பாய் கரம் நீட்ட நாங்கள் இருக்கின்றோம்
எதற்கும் கவலை வேண்டாம்
எல்லாம் இனிதாய் முடிந்திடுமே


*******"

நேரம் இருந்தால் இதையும் படிக்கவும்

பறவையின் சிறை வாசம்

சிறை வாழ்க்கையை வெறுக்கும் மானிடரே,

எம்மை சிறையில் அடைத்து அழகு
பார்க்கும் மானிடரே.

குற்றம் செய்தால் சிறை வாசம்
உங்கள் ஆனந்தம் எமது குற்றமா.

சுற்றம் நட்பு இல்லாமல்
தனிமை எம்மைக் கொள்கிறது.

உணர்ச்சி உள்ள மானிடரே
மற்றவர் உணர்ச்சியை மதியுங்கள்.

எம்மை பல நாள் காணாமல்
என் தாய் வடிக்கும் கண்ணீரால்,

உன் குடும்பம் சாபம் பெற்றிடுமே
அதை சற்றும் நீங்கள் உணர்ந்தீரா.

எம் பழக்க வழக்கம் நீர் அறிவீரா
எம் உணவு முறை தான் தெரிந்திடுமா.

எதுவும் முழுதாய் தெரியாமல்
பின் ஏன் இந்த விஷப்பரீட்சை.

எங்களைப் படைத்த ஆண்டவனே
உன்னிடம் முறையிட நாங்கள் வந்தோம்.

பறவை இனத்தை சேர்ந்த எங்களை
இப்படி தவிக்க விடலாமா.

எங்களைக் காப்பாய் நீ என்று
நாங்களும் அமைதியாய் இருக்கின்றோம்.

ஆறறிவு படைத்த மனிதரிடம்
இரக்க குணத்தை ஏன் வைக்க மறந்தாய்.

நீ செய்த குற்றத்தால்
நாங்கள் அவதிப் படுகின்றோம்.

விரைவில் நீயும் வந்துவிடு
இவர்களிடம் இருந்து எம்மை காத்துவிடு.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (24-Mar-20, 9:33 am)
பார்வை : 53

மேலே