அப்பா வந்தார் கடவுளாக!

நானும் தங்கையும் எப்பொழுதும் போல வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்தோம் .....சின்னவளே!என்று அம்மா தங்கையை அழைத்தாள்...அவளும் சென்றாள்
தெருமுனையில் இருக்கும் கடைக்குச் சென்று பச்சை மிளகாய் 2 ரூபாய்க்கு வாங்கிட்டு வாடி என்று கூறினாள்..அவளும் சென்று விட்டாள்....இப்பொழுது என் கண்கள் விளையாட ஆள் தேடி என் அண்ணனை பார்த்தது ..அவனோ ட்ட்ர்ர்...ட்ட்ர்ர்..என குரட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான்...இவன் எப்போ எழுந்து இவ கூட நாம எப்போ விளையாடறது என்று மனசுக்குள்ளே புலம்பி சளித்துக் கொண்டேன்....வீட்டிற்குள் சிறு உருவம் நுழைந்தது அம்மா என்றவாறே....திரும்பி பார்த்தேன்...தங்கை வந்து விட்டாள் கையில் பச்சை மிளகாய் பொட்டலத்துடன்...அம்மா அவளிடம் இருந்து அதை வாங்கிக் கொண்டாள்...நானும் தங்கையும் மீண்டும் விளையாடத் தொடங்கினோம்...வெளியில் வாசலின் ஓரத்தில் எங்க அப்பா அவரின் முக பிம்பத்தை கண்ணாடியில்
சிறையிட்டு விட்டு தன் தாடியை ஷேவிங் செய்து கொண்டிருந்தார்...சிறிது நேரம் அவர் ஷேவிங் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தோம்...மீண்டும் ஒரு குரல் ...வேறு யாரும் இல்லை எங்க அம்மா தான் பெரியவளே! என்று என்னை கூப்பிட்டாள்...ஓடிச் சென்று கேட்டேன்...என்னம்மா?
கடைக்கு போய்டு 4 ஷீக் சேம்ப் வாங்கிட்டு வா என்று கூறினாள்....நானும் கையில் காசை வாங்கிக் கொண்டு சென்றேன்...கடையில் 4சேம்ப்பை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்....நடக்க நடக்க வீடே வரவில்லை ...நெஞ்சில் அச்சம் பரவியது ...கைகள் சேம்ப் பாக்கெட்டுகளை கசக்கிக் கொண்டே இருந்தது...என்ன செய்வேன் நான் ....அழுது விட்டேன்...அழுது கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தேன் நேரம் கடந்து விட்டது...தொலைவில் ஒரு கோயில்.....அருகில் சென்றேன்...கடவுளே! என்னை காப்பாத்து என்றேன்...கடவுள் எப்பொழுதும் போல சிலையாகவே இருந்தார்...அங்கிருந்து நகர்ந்தேன்...அழுது அழுது கண்களில் கண்ணீரை காணவில்லை....நேரம் கடந்து விட்டது...ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டேன்....கண்களை உயர்த்தினேன் தூரத்தில் வந்து கொண்டிருந்தார் என் அப்பா...ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக்கொண்டேன்...கடவுளே! என்னை காப்பாத்து என்றேன்..ஆனால் நான் எதிர்பார்க்கவே இல்லை கடவுளே வந்து என்னை காப்பாற்றுவார் என்று....

மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றேன்
அப்பாவின் கைகளை இறுக்கி
பிடித்துக்கொண்டு....

*******

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Mar-20, 1:11 pm)
பார்வை : 176

மேலே