காதல் பார்வை

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பார்வையாலே கிழிக்கிறியே....
அது விழிகளா -இல்லை
வில் அம்பா...

வெட்ட அறுவா வீச்சு அறுவா
உன்னோட பார்வை
🔪கத்திபட்ட காயமெல்லாம்
கையோடு போச்சு -உன்
கண்பட்ட காயம் மட்டும்
நெஞ்சோடு ஆச்சு...

உதட்டு சுழிப்பிலே -என்
உயிரை எடுக்குற
மௌனம் பேசியே -என்னை
மரணம் பாக்க வைக்குற....

சிரிச்சு பேசடி -என்னையும்
ரசிச்சு பாரடி

சிரிக்க தெரிஞ்சா சோகம் கூட சுகமடி
ரசிக்க தெரிஞ்சா இருட்டு கூட
அழகடி...

சிரிச்சு பேசடி -என்னையும்
ரசிச்சு பாரடி.....

உன் ரசனையெல்லாம் திரட்டி கேளடி
என்னைபத்தி என்ன சொல்லும்
கண்ணுக்குள்ள காதல் சொல்லும்
கனவு கூட வந்து போகும்
கண்டு பாரடி.....

என் பாதி உசுருல.... -நீ
மீதி உசுரடி.

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

எழுதியவர் : Karikayal (24-Mar-20, 3:36 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kaadhal parvai
பார்வை : 260

மேலே