கொரோனா பாடல்

ஈரக் கொலையை நடுக்கிறியே
எங்கே போனாலும் படுத்துறியே
ஊர அடக்கிப் பார்க்கிறியே
உயிரை விலையா கேட்கிறியே
கொரோனா ஏ கொரோனா ......(ஈரக்)
**
தொட்டா போதும் ஒட்டுறியே
தும்மினாலும் ஒட்டுறியே
துப்பி வைக்கும் எச்சிலிலே
தொடர்ச்சியாக வாழுறியே
சீனாக்காரன் செஞ்சதெல்லாம்
சீக்கிரமா அழிஞ்சிடுமே
வீணாப் போன நீ ஏனோ இங்கே
வேரை பரப்பிக் கிடக்கிறியோ
எட்டிப் பேச வச்ச கொரோனா
நீ என்ன செய்ய போகிறாயோ
இனி என்ன செய்ய போகிறாயோ..(ஈரக்)
**


விட்டுப் போக மறுக்கிறியே
வேதனையை கூட்டுறியே
பெட்டிப் பாம்பாய் அடக்குறியே
பேரிழப்பை கொடுக்கிறியே
கட்டிப்போட ஆள் இல்லன்னு
கவலையத்து திரிஞ்சவனை
கட்டிப்போட்டு பார்க்கிறியே நித்தம்
கவலைக்குள்ளே தள்ளுறியே..
அச்சம் கொள்ள வைத்தக் கொரோனா
உன் அழுத்தம் தாங்க முடியலியே
உனை அடக்க வழியும் தெரியலியே.
.(ஈரக்)
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Mar-20, 1:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 79

மேலே