உனதல்ல

வாழும் வீடு முனதல்ல
வந்த உறவும் சொந்தமல்ல !
பாழும் நெஞ்சே மயங்காதே
பாசப் பிணைப்பில் உருகாதே !
தாழும் நிலையே வந்திடினும்
தலைவன் பாதம் துணைக்கொண்டால்
ஏழு பிறவித் துன்பொழிந்தே
ஏற்றம் பெற்றே உய்ந்திடலாம்!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:40 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : unathalla
பார்வை : 15

மேலே