காய்களுக்கிடையே

காய்களுக் கிடையே சிறுகிளி யொன்று
கனிவுடன் கவிதையாய்ப் பேசும் !
தாய்மனம் மகிழ்ந்து புகைப்பட மெடுக்கத்
தாமரை யாய்முகம் பூக்கும் !
வாய்நிறை சிரிப்பும் கண்களில் குறும்பும்
மாமர விலைகளை யீர்க்கும் !
வேய்ங்குழல் போலும் கொஞ்சிடும் குரலில்
வீசிடும் தென்றலும் மயங்கும் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:01 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 7

மேலே