எங்கெங்கெங்கோ தேடுகிறேன்

என்னுள் ளிருக்கும் உனைமறந்தே
எங்கெங் கெங்கோ தேடுகிறேன் !
அன்புப் பெருக்கால் விழிநனைய
அடங்கா ஆவ லோடுன்னை
இன்னும் தேடி யலைகின்றேன்
இறைவா விடையும் கிடைக்கவில்லை !
கன்றின் தவிப்பை அறியாயோ
கனிவாய் உணர்த்த மாட்டாயோ ??

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:07 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 13

மேலே