வண்ணப் பாடல் காதல்

தனதனன தனந்த தானன தந்தனானா
தனதனன தனந்த தானன தந்தனானா

உனதழகை வியந்து பேசிடும் பெண்களாலே
உரிமையுட னிணைந்து காதலி லொன்றுவேனே!
மனமுருகி நெகிழ்ந்து பாடிடு மன்பினாலே
மதிமுகமும் மயங்கி நாணிடு மின்சொலாலே!
கனவுகளில் விரும்பி யாடிடு வஞ்சியோடே
கடலிலெழு தரங்க மாயிசை சிந்துவேனே
நினைவுகளி லுழன்று போரிடு நெஞ்சினோடே
நிதமுமுனை மறந்தெ னாருயிர் சென்றுபோமோ ?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:21 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 9

மேலே