11 தெய்வம் என்ற ஒன்று உண்டு என்ற தெளிவு - தெய்வம் உண்டு எனல் 5

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பூதம்யா வுக்கும் ஏணாய்ப்
..பொருந்திய விசும்பைக் காற்றை
வேதனூ லதனை மண்ணோர்
..மெய்யுரை யுயிரை நெஞ்சை
ஏதமி லறத்தைக் கண்ணாற்
..பார்த்திலோ(ம்) எனினு முண்டென்(று)
ஓதல்போல் தெய்வந் தானொன்(று)
..உளதெனல் தேற்ற மம்மா. 5

- தெய்வம் உண்டு எனல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நிலம், நீர், தீ முதலிய பூதங்களுக்கு ஆதாரமாய் உள்ள வானத்தை, காற்றை, வேத நூல்களில் கூறப்பட்ட அறிவை, நிலைபெற்ற அறிவுடையோர் சொல்லிய உண்மை உயிரை, நெஞ்சில் குற்றமில்லாத அறத்தைக் கண்ணால் நாம் பார்த்ததில்லை. ஆனாலும், அவையெல்லாம் உண்டென்று ஒப்புக் கொள்கிறோம். அதுபோன்று தெய்வம் என்ற ஒன்று உண்டு என்று தெளிவு கொள்ள வேண்டும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

வேதநூல் - அறிவு, ஏண் - ஆதாரம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-20, 10:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே