24 உடல் ஊண் உணர்வெலாம் உதவுவோன் கடவுள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 8

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

உருவில்சூ னியமா யாதும்
..உணர்விலா திருந்த நம்மைத்
திருவுட லோடு ஞானச்
..சீவனா கப்ப டைத்துச்
சருவநன் மையுமே தந்து
..தந்தையுந் தந்த நாதன்
மருமல ரடிக்கு நம்மை
..வழங்குதல் பெரிதோ நெஞ்சே. 8

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உருவில் ஒன்றுமில்லாமலும், வேறு எந்த உணர்வும் இல்லாதிருந்த நமக்கு உடலும், அறிவுள்ள உயிராகவும் படைத்து எல்லா நன்மையும் தந்தருளி, தந்தையாக உள்ள கடவுளின் மெய்யான மலர் போன்ற திருவடிக்கு நம்மை ஒப்புவிப்பது பெரும் செயலாகுமோ நெஞ்சே!” என்கிறார் இப்பாடலாசிரியர்.

மருமலர் – மெய்யான மலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-20, 1:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே