காதல்🌹

காதல்🌹

என் அழகு தேவதையே!
ஆடி வரும் தென்றலே!
மனக்கும் மல்லிகையே!
மாய மோகினியே!
மயக்கும் விழியாளே!
சோர்ந்து போய் இருந்த என் வாழ்க்கையை சொர்கம் ஆக்கிய சிங்கார வள்ளியே!
வானவில்லின் நிறத்தை கண்களில் மிரள செய்கிற அதிசய
பொக்கிஷமே!
கண்களால் காதல் சொல்லிவிட்டாய்.
ஆனால் சந்தோஷத்தை கொண்டாட முடியவில்லை.
காரணம் தற்போதைய நிலைமை.
இருந்தாலும் என்ன
நீயும் நானும் வானம்பாடியாய் மாற இறைவனிடம் விண்ணப்பித்து உள்ளேன்.
அதை அவரும் உடனே நிறைவேற்றுவதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
நாளை விடியலில் நாம் இருவரும் சுதந்திர பறவைகள்.
காதல் வானில் சிறகடித்து பறப்போம்.
மரக்கிளையில் உட்கார்ந்து மூக்கோடு மூக்கு உரசுவோம்.
காதல் பாட்டு பாடி
ஆனந்தமாய் வாழ்வோம்.
என்னுடைய முடிவு உனக்கு பிடிக்கவில்லையா?
உன் உடல் மொழி அவ்வாறே கூறுகிறது.
சரி, சாலரத்தின் வழியே
விழி வழியாக காதல் செய்வோம்.
குறுசெய்தி மூலம் காதலை பகிர்வோம்.
சோதனை காலம்
இலையில் படுத்துறங்கும் பனி துளி போல்
கதிரவன் வந்தவுடன் காணாமல் போய்விடும்.
அது போல் இந்த சோதனை காலமும் காணாமல் போய்விடும்.
காதல் கண்மனியே!
உள்ளத்தால் நெருங்கிய நாம்
உருவத்தால் நெருங்க இயலவில்லை என்ற வருத்தம்.
உன் தேன் குழல் விரல்களை கூட தொட முடியவில்லை என்ற வருத்தம்.
என்றாலும் அவ்வபோது நீ மின்னல் என ஜன்னல் வழியே
என் மீது மின்சாரம் பாய்ச்சி விட்டு செல்வது
என் உயிரை உலுக்கி உல்லாச ஆகாயத்தில்
உஞ்சல் கட்டி உன்னுடன் கற்பனையில் அடுகிறேன்
அவ்வப்போது
என் கண்களுக்கு விருந்து அளிக்க என் எதிரில் வா!
இப்போதைக்கு என்னுடைய பறக்கும் முத்தத்தை உனக்கு பரிசாக தருகிறேன்.
அதை நீ உன் கையில் பிடிப்பதை விட உன் இதழால் கவ்விவிடு.
உன்னையே நினைத்து வாடும்
உன் அன்பு காதலன்
- பாலு.

எழுதியவர் : பாலு (30-Mar-20, 9:06 am)
சேர்த்தது : balu
பார்வை : 320

மேலே