மாதவிடாய் | முஹம்மது ஸர்பான்

பூக்களே! நீங்கள் மரணிப்பீர்
இன்று நெகிழிகள் அறியும்
பூமியில் இறைவிக்கு தீட்டு
பழைய துணி தேடும் போது
நாட்களே! நீங்கள் பாவிகள்

கற்கும் போது கூட நிகழும்
தூக்கும் புத்தகப்பை கூறும்
பாவம் பல்லாங்குழி வயது
ஈரம் கசியும் சிகப்பு நாட்கள்
இனி கோயில்கள் இல்லை

கறை கறையாய் தொடங்கி
அலை அலையாய் பாய்ந்து
தொடர்கதை துன்பங்களில்
இறைவா குட்டிப் பாவாடை
புன்னகை மேலே பூகம்பம்

ஊமை போல ஓர் பேராசை
பேரன்பின் தோள் கேட்பாய்
குளியலறை நடுவே நின்று
நிற்கா திரவம் என்புடைக்க
பிறப்பே நீ ஒரு மரணயிசை

சிறு ஓய்வு வாங்கிய தேகம்
நித்திரை கேள்கின்ற போது
கைக்குழந்தை போல நீயும்
புரியாமல் தூமத்துளி தூவ
பனிப்பூக்கள் போல வீட்டுக்
குப்பைக்குள் சிகப்பு ரோஜா

மகப்பேறென்ற செந்நதியில்
நிகழ்ந்த ஓர் அற்புதம் தீட்டு
களிமண் மானிடனை கீறிய
கரு உளியின் புனிதம் தீட்டு
காமன் கடையை சாத்தி - நீ
ஆணாக பெண்ணை ஏற்பீன்
நீ தேவதை என்று தாய் கூட
முத்தங்களால் மொழிவாள்

எழுதியவர் : முஹம்மது ஸர்பான் (31-Mar-20, 11:49 am)
பார்வை : 122

மேலே