கொரோனாவை எதிர்ப்போம்

சுத்தம் கொரோனாவைத் துரத்தும்
சுத்தம் சோறு போடும்
நித்தம் சோப்பு கொண்டு
நன்றாக பலமுறைக் கைக்கழுவு
முகம் கழுவு ; வேம்பு மஞ்சள் நீரால்
தெளித்து வீட்டு தரையை சுத்தம் படுத்து
வீட்டிலேயே இருந்துவிட்டு கொஞ்சம்
தேகப் பயிற்சியும் செய்து உடலை
சீராக வைத்துக்கொண்டால் கொரோனாவை
எதிர்த்திடலாம் வாழ்ந்திடலாம்
சில நாட்கள் வீட்டிலேயே இருக்க
இதுவே நாட்டுக்கு இப்போது நாம்
ஆற்றும் தொண்டு மறவாதீர்
மக்களே கைகுவித்து விண்ணப்பம்
வைக்கும் உங்கள் கவிஞன் வாசவன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Mar-20, 6:49 pm)
பார்வை : 102

மேலே