நிலாவும் கலாவும்

நிலா அது வானத்தில்
கலா அவள் வனத்தில்

பூமியை சுற்றினால்
அது நிலா
இந்த பூமியே சுற்றினால்
அவள்தான் கலா

நிலா களங்கம் கொண்டது
கலா கல் அங்கம் ( இதயம்)
கொண்டவள்

இருவரின் முகமும்
வட்டமே
இவள் முகம் மட்டும்
என்றும் கண்டதில்லை
வாட்டமே

இருவரின் நிறமும்
வெண்மையே
இவள் நிறதால்
பெருமை கொள்கிறது
பெண்மையே

நிலவுக்கு மறுபெயர் சந்திரன்
இவளின் மறுபெயர் சந்திரா

குழந்தைகள் கதை
கேட்கும் போது மட்டும்
நிலவில் ஆயா வடை சுடுகிறார்
குழந்தை இவள்
கேட்க்கும்போதெல்லாம்
இவளின் ஆயா வடை சுடுகிறார்


நிலவைத் தொட்டவன்
ஆம்ஸ்ட்ராங்
இவள் நிழலைத்
தொட நினைத்தால் கூட
ஆம் மனம் ஸ்ட்ராங் காக
இருக்க வேண்டும்

அந்த மழைக்கால இரவில்
அனைவரும்
தன் மோகக் குழந்தைகளுக்கு
அந்த நிலவைக் காட்டி
சோறூட்டி கொண்டிருக்க

நிலவு மட்டும்
தன் மேக குழந்தைகளுக்கு
அவள் நிழலை காட்டி நீர் ஊட்டிக்கொண்டிருந்தது

இவள் நடந்தால்
தேய்பிறை
வளர்ந்தால்
வளர்பிறை

நிலவுக்கு அமாவாசை
உண்டு
இவளுக்கும் அம்மா
ஆசை உண்டு

எழுதியவர் : குமார் (31-Mar-20, 9:35 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 180

மேலே