மொழிப்போர்

கோலார் தங்கவயலின்
வரலாற்று ஏடுகளை புரட்டிப்பார்த்தேன்
அதில் பால்ராஜ், உதயக்குமார், மோகன், பரமேஸ்வரன்
எனும் மொழிப்போர் தியாகிகளின்
உதிரத்தின் வாசனை இன்னும் வீசிக்கொண்டிருந்தது

அன்று தங்கவயல் நகரத்தில்
தாய்மொழி கற்பது எங்களின் உரிமை
தாய்மொழி எங்களின் உயிர்முச்சு
தாய்மொழிக்காக்க ஒரு போராட்டம்

போராட்டத்தின் உச்சம்
முன்னே வந்த அந்த நான்கு தமிழ் மறவர்களின்
நெஞ்சிக்குள் புகுந்தது காவல்துறையின் தோட்டாக்கள்
கர்ஜித்தது அந்த சிங்கங்கள்
தங்கவயலின் சரித்திரத்தில்

மாவீரர்களின் நெஞ்சுக்குள்
தஞ்சம் புகுந்தோம் என்ற
பெருமிதம் கொண்டிருக்கும் அந்த தோட்டாக்கள்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Apr-20, 4:43 am)
பார்வை : 511

மேலே