நல்லதும் தீயதும்

நல்லவை இவை நல்லவை என்று
நல்லதை எழுதினால் படிப்போர் இல்லை
பலர் தீயவைக்கு நல்லவைபோர்த்தி எழுதிட
இந்நல்லவை ஏற்றிப்புகழ்ந்து படிப்போர் பலர்
நல்லோர் நட்பு பாராது தீயோர் சேர்க்கையில்
இணைவார் பலர் போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Apr-20, 2:58 pm)
பார்வை : 47

மேலே