எதிரொளிக்கிறாய்

எதிரொளிக்கிறாய்...
என் எதிரே ஒளிக்கிறாய்
படுகதிராய் சிலிர்க்கிறாய்
எதிர்கதிராய் மிளிர்கிறாய்..
விலகுகதிராய் ஒதுங்குகிறாய்..
கோணங்களால் கோர்க்கப்பட்டவளே..
குறுங்கோணமாய் குறுகிப்போகாமல்
செங்கோணமாய் செம்மை குலையாமல்
நேர்கோணமாய் நேர்த்தி தாழாமல்
விரிகோணமாய் விரிவுரை சுருங்காமல்
பின்வளைவுக்கோணமாய் முன்னடைவும் பின்னடைவுமில்லாமல்
முழுகோணமாய் முகங்கோணாமல் எதிரொளிக்கிறாய்...
என் எதிரே ஒளிக்கிறாய்..
உலகம் போற்றும் தேற்றமே..
எனை தேற்றும் தோற்றமே
உந்தன் வினா வருமென்று விடையறிந்து வீற்றிருக்கிறேன்
வினாக்களை மீண்டும் வினாவாக்கி விடாதே..
அதை வீணாக்கி விடாதே..
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (4-Apr-20, 11:28 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 66

மேலே