அவள்
பால்போல காயும் நிலவொளியில்
பாந்தமாய் பவனி வந்தாள் நதிக் கரையில்
பாவையவள் அவள் அணிந்திருந்த
வெண் முத்தாரம் பூரணநிலவொளியில்
எழுப்பிய ஒளிக்கதிர்கள் மெல்ல மெல்ல
எழும்பி அவள் சிரசின் மேல் ஓர்
வெண்கொற்றக்கொடை விரித்தாற்போல்
காட்சி தர பாவையவள் காட்சி தந்தாள்
எழிலாய் பவனி வரும் அழகு மேனகையாய்
இவள்தான் என் காதலி என்று நினைக்கையில்
பேரின்பத்தில் வாட்டைத்து நின்றேன் நான்
அவளையே வைத்தக் கண் வாங்காது பார்த்திருந்து