கல்லூரி காதல் 🌹

கல்லூரி காதல் 🌹

அவன்:- பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவள் :- நன்றி
அவன்:- நன்றி மட்டும் தானா.
அவள்:- நீங்கள் சற்று தாமதம். இனிப்பு தீர்ந்துவிட்டது.
அவன்:- இனிப்பே இனிப்பை பற்றி பேசுவதா!
அவள்:- இது கொஞ்சம் ஓவர்.
அவன்:- எல்லாமே ஓவர் தான்.
அவள்:- புரியவில்லை
அவன்:-
தாமரையாள் மலர்ந்தாள்.
படபடக்கும் பட்டாம்பூச்சி
படபடக்குது.
வண்ண மீண்கள் துள்ளி விளையாடுது.
மின்னல் பார்வை வெட்டுது.
புன்னகை பூ சிரிக்குது
மழை மேகம் காற்றில் பறக்குது.
சந்தண கிண்ணம் பளபளக்குது.
முக்கனி சுவை கொண்ட
ஆரஞ்சு சுளை ஈர்க்குது.
தென்னை மர கீற்றில் மறைந்து இருக்கும் இளநீர்கள்.
அதிசயம் நாணல் அதை தாங்கி பிடிக்கிறது.
இன்ப சுரங்கமே
மது குடமே......
அவள்:- ......
அவன் :- மன்னிக்கவும். அழகை வர்ணிக்க வேண்டும்.
அழகை ஆராதனை செய்ய வேண்டும்.
அவள்:- ......
அவன் :- தவறு இருப்பின் மன்னிக்கவும்.
அவள்:-
ஒரு முடிவோடு வந்தாய்.
முடித்துவிட்டாய் என்னை.
அவன்:- நீங்கள்...
அவள்:- நீங்கள் என்ன நீங்கள்.... நான் இனி உன்னுடைய "நீ"
அவன்:-
பிறந்தநாளில் ஒரு காதல் காவியம் தொடக்கம்.
வென்னிலவே வா !
என் கரம் பற்று !
காதல் பயணம் செய்வோம்.
அவள்:- யார் அங்கே! அலங்கார தேரை அழைத்து வாருங்கள்.
அவன்:- என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இதயராணியே என் அருகில் அமர்வதை விட
என் மடியில் அமரளாமே
அவள்:- ஹலோ! கனவு கண்டது போதும். இன்னும் மூன்று வருடம் இருக்கு.
இப்போதைக்கு கிளாசுக்கு போகலாம்.
அவன்:-
மூன்று வருடம்
மூன்று நாளாக
ஓடி விடும்.

- பாலு.

எழுதியவர் : பாலு (5-Apr-20, 7:41 pm)
சேர்த்தது : balu
பார்வை : 127

மேலே