அந்தியில் பூத்த சூரிய காந்தி

மஞ்சள் வானம் அந்திப்பொழுது
சூரிய காந்தி பூத்த வயல் வெளியில்
மஞ்சள் முகத்தாள் அவள் வந்து நின்றாள்
வெட்கிப்போய் சூரிய காந்தி எல்லாம் தலைகுனிய
அவள் மட்டும் சிரித்தாள் அந்தியில் பூத்த சூரிய காந்தியாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Apr-20, 9:39 pm)
பார்வை : 78

மேலே