என்னை தேடாதீர்கள்❤❤❤------இஷான்

என் பாடலை இசைத்துக்
கொண்டே இருக்கும்
அவள் புல்லாங்குழல் இதயத்திற்குள்
புதைந்து கிடப்பேன் என்னை தேடாதீர்கள்..

விடியலின் அழகில்
வெடிக்கும் பனித்துளியான
அவள் நகைப்புக்குள்
நனைந்து கிடப்பேன் என்னை தேடாதீர்கள்

அடிக்கடி வெட்கம் கொட்டும்
அவள் பாவனைகளை
வாசித்துக் கிடப்பேன்
என்னை தேடாதீர்கள்...

நெளிந்து தொங்கும்
அவள் கூந்தல் பாதைக்குள்
மூச்சுக் காற்றால் நடந்து திரிவேன்
என்னை தேடாதீர்கள்...

அவள் அன்புக் கிணற்றுக்குள்
கண்ணாடித் தண்ணீராய்
உறங்கிக் கிடப்பேன்
என்னை தேடாதீர்கள்(இஷான்)

எழுதியவர் : இஷான் (6-Apr-20, 5:35 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 98

மேலே